வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 04
🍥🌿🍥🌿🍥🌿🍥🌿🍥🌿🍥
💠 இன்றைய நித்தியக்கடன்
💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 இன்றைய சாதகம்
💠 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
💠 இன்றைய நற்சிந்தனை
💠 எதிர்மறையான சிந்தனைகளை கொண்டு இந்த பிரபஞ்ச வான் காந்தத்தை களங்கப்படுத்த நாம் ஒரு காரணமாக இருக்க வேண்டாம். தவபயிற்சி இல்லாதவர்களின் எண்ணத்தின் விளைவு அவர் அவர்களுடைய உடல் அளவே பாதிக்கும். ஆனால் தவம் பயின்று தவத்தில் பழகிய மனிதனுடைய எண்ணத்தின் விளைவு உடலை தாண்டி வான்காந்த தோடு இணைந்து, லேசாக பயம் கொண்டவரின் நெஞ்சத்தையும் நடுநடுங்க செய்துவிடும். ஆகவே எதிர்மறையான எண்ணங்களை அறவே விட்டு விடுவோம்.
💠 இன்றைய தற்சோதனன
💠 பிறப்புக்கும் இறப்புக்கு மான இந்த மனித வாழ்க்கையை துவக்கத்திலேயே பழுது நீக்கம் செய்யாத அறிவின் குறைபாடு, இன்று உலகளாவிய குற்றங்களாக பரந்து விரிந்து அனைவரது வாழ்க்கையிலும் விளையாடிக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கிறோம். பணம் இவ்வுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பணத்திற்கு முன் குணம் இருந்த இடம் தெரியாமல் கடைக்கோடி பகுதியில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையிலிருந்து மனித சமுதாயம் முழுமையாக மாற்றம் பெறட்டும்.
💠 இன்றைய பண்புப்பயிற்சி
💠 பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இந்த நான்குமே உலக மக்கள் அனைவரும் இன்று சந்தித்து கொண்டிருக்கக்கூடிய துன்பங்களுக்கு மூல காரணம். பாரபட்சமில்லாமல் எல்லோரும் மனவளக்கலை பயிற்சிகளில் இணைந்து தன் வாழ்வை தூய்மை செய்து கொள்ளும் பொறுப்பையும் கடமையையும், உணரக்கூடிய வாய்ப்பினை உலக மக்கள் அனைவரும் பெறட்டும். அவர்களுடைய மனமும் அறிவும் மலர்ந்து ஞான ஒளி வீசட்டும். வாழ்க வையகம்... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...
💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment