வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 03
🎲🔥🎲🔥🎲🔥🎲🔥🎲🔥🎲
🧩 இன்றைய நித்தியக்கடன்
🧩 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🧩 இன்றைய சாதகம்
🧩 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
🧩 இன்றைய நற்சிந்தனை
🧩 வெந்நீர் கொதி நிலையை அடைவதற்கு 100 டிகிரி வெப்பம் தேவைப்படுகிறது. அரிசியை வேகவைப்பதற்கும், பாலை காய்ச்சுவதற்கும் அதற்கு தகுந்த வெப்பநிலை தேவைப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வெப்பநிலை தேவைப்படுகிறது. இது போலவே உயிரில் உள்ள விலங்கின பதிவை ( கலங்கத்தை) அகற்ற அதற்குத் தகுந்த வெப்ப நிலை தேவைப்படுகிறது.
🧩 இன்றைய தற்சோதனன
🧩 உடல்பயிற்சி, காயக்கல்பம், தவம் இவைகளை செய்யும்போது உங்களுடைய உடலில், உயிரில் ஒரு வெப்பம் உருவாகும். இந்த வெப்பம் விலங்கினப் பதிவுகளை அகற்றக்கூடிய ஞான வெப்பமாகும். இந்த வெப்பத்தை உருவாக்கி கொண்டு விலங்கின பதிவை படிப்படியாக உயிரிலிருந்து அகற்றி கொள்வோம். இந்த விஞ்ஞானத்தை எல்லாவகையிலும் தற்சோதனை செய்யுங்கள் "சொல்லால் மட்டும் நம்பாதீர் சுயமாய்ச் சிந்தித்தே தெளிவீர்களாக"
🧩 இன்றைய பண்புப்பயிற்சி
🧩 ஆராய்ச்சியையும், தற்சோதனையையும் அவரவருக்குள்ளிருந்து துவங்குங்குவோம். அதுதான் சரியான துவக்கமாக சரியான இலக்கை அடையக்கூடிய செயலாக அமையும். நீங்கள் தொடர்பு கொள்ளும் பொருள், இடம், காலம், நோக்கம், திறமை போன்ற அனைத்திற்கும் அதற்கு தக்கவாறு விளைவு நிச்சயம் உண்டு. இறைத் தன்மை பெருகும் செயல் பண்புகளை வளர்த்துக் கொண்டு நலமான வாழ்வை, வளமாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🧩 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🧩 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment