நித்தியக்கடன் டிசம்பர் 01 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 01


 🔥🧊🔥🧊🔥🧊🔥🧊🔥🧊🔥


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🔰 இன்றைய சாதகம் 


🔰 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🔰 இன்றைய நற்சிந்தனை 


🔰 மழை பொழிவதும், காற்று வீசுவதும், ஆற்றில் தண்ணீர் ஓடுவதும் அளவோடும், முறையோடும் இருந்தால் அனைவருக்கும் நன்றாக இருக்கும். அளவு முறையை மீறி பொழியும் மழை, வீசும் காற்று, ஓடும் நீர் அதன் வழிப்பாதையிலும், அந்தந்த பகுதியில் வாழ்கிற அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகப்பெரிய துன்பமாக அமைந்து விடுகிறது.

 

🔰 இன்றைய தற்சோதனன


🔰 அளவுமுறை காக்கப்படாத எந்த ஒன்றிலிருந்தும் நாம் அனுபவமாக பெறுவது துன்பமே ஆகும். இதை தவிர்ப்பதற்கு அனைத்திலும் அளவு முறையை பின்பற்ற வேண்டும். உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் என்று எதனோடெல்லாம் நாம் தொடர்பு கொள்கிறோமோ அதனோடெல்லாம் அளவோடும், முறையோடும் வாழ்ந்து பழகும்போது நாமும் நமக்கு துன்பம் செய்துகொள்ளாமல் பிறருக்கும் துன்பம் ஏற்படுத்தாமல் வாழ்க்கையின் இனிமையை நம்மால் காத்துக்கொள்ள முடியும். தற்சோதனை செய்து வாழ்வின் இனிமையை காத்துக் கொள்வோம்.


🔰 இன்றைய பண்புப்பயிற்சி


🔰 வாழும் சூழ்நிலைகள் அனைத்திலும் விருப்பு வெறுப்பில்லாதது வாழும் பண்பை உயர்த்திக் கொள்ள வேண்டும். "வேண்டுதல், வேண்டாமை" என்ற நிலைப்பாட்டில் நாம் உயர்வு காணவேண்டும். விருப்பம் என்று ஒன்று இருந்தால் இன்னொரு பக்கம் வெறுப்பு என்றும் வந்துவிடும். எதையும் வெறுக்கவும் வேண்டாம், எதையும் நீக்கவும் வேண்டாம், எதனோடு தொடர்பு கொண்டாலும் கடமை உணர்ந்து செயலாற்றும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...            


🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments