வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 17
💥🏝️💥🏝️💥🏝️💥🏝️💥🏝️💥
☘️ இன்றைய நித்தியக்கடன்
☘️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
☘️ இன்றைய சாதகம்
☘️ இன்று பௌர்ணமி காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
☘️ இன்றைய நற்சிந்தனை
☘️ மிக பிரம்மாண்டமானது உயிரியல் கோட்பாடு. உயிரானது எல்லாவற்றோடும் இணைந்து இயங்கும், எந்த ஒன்றும் உயிரை அழித்துவிட முடியாது. உயிர் ஒரு தனித்துவம் வாய்ந்த இயக்கம், இந்த பிரம்மாண்டமான இயக்கத்தில் நாம் ஒரு பகுதி. உயிருக்கு உகந்த முறையில் நாம் நம்முடைய செயல்பாடுகளை சீரமைத்து கொண்டோமேயானால், அது எல்லா வகையான நன்மைகளையும் நமக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேற்றம் செய்யும்.
☘️ இன்றைய தற்சோதனன
☘️ பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட இந்த பரு உடலுக்குள்ளாக உயிர் உடலும் காந்த உடலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பஞ்சபூதங்களில் மற்ற நான்கு பூதங்கள் எதுவெல்லாம் எந்தெந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த பாதிப்புகளை சரிசெய்ய உயிர் தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்யும். உயிர் எடுக்கும் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் போதும். அந்த ஒத்துழைப்பு என்னவெனில் உடற்பயிற்சி, கயகல்பம், தவம், தற்சோதனை.
☘️ இன்றைய பண்புப்பயிற்சி
☘️ உயிரியக்கம் என்பது ஞான விளைவை அடிப்படையாக கொண்டது. ஆனால் விலங்கின பதிவுகளால் உயிர் பரு உடலுக்குள் சிக்கிக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முறையான பண்புகள் தேவை, அந்தப் பண்புகளை வாழ்வியலாக வாழ்ந்து மேல் பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டால், இயல்பாகவே நம் மனம் உயிரோடு இணைந்து ஞானத்திற்கு தகுதி உடையதாக உயர்வு பெற்றுவிடும். எல்லாவகையிலும் எல்லா நேரங்களிலும், உயிருக்கு உகந்த பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
☘️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
☘️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment