வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 08
🪻🎨🪻🎨🪻🎨🪻🎨🪻🎨🪻
🌿 இன்றைய நித்தியக்கடன்
🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌿 இன்றைய சாதகம்
🌿 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
🌿 இன்றைய நற்சிந்தனை
🌿 சமுதாயம் ஒரு நாளும் வன்முறையை ஏற்றுக்கொள்வதே இல்லை. வன்முறை நடைபெறும் பகுதியில் பொருள் இழப்பும், பொருள் தேவையும் அதிகரிக்கின்றன. அன்றாட இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பல்வேறு வகையில் சிக்கல்கள் துன்பங்கள் ஏற்படுகின்றன. இந்த வன்முறை என்பது நம் உடலுக்குள்ளாகவும் நடைபெறுகிறது. அளவு முறையில் மீறி உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவைகளை கையாளும் போது அதற்குப் பெயரும் வன்முறைதான். வன்முறையின் விளைவுகள் மனதிலும், உடலிலும் பெரிய துன்பமாகவும் வாழ்க்கைச் சிக்கல்களாகவும் இருக்கிறது.
🌿 இன்றைய தற்சோதனன
🌿 எந்த ஒரு காலகட்டத்திலும், எதற்காகவும் வன்முறையை ஆதரிக்காதீர்கள். உங்களுடைய இந்த சரீரம் என்பது ஞான சரீரமாகும். அமைதியோடு இணக்கத் தன்மையோடு, அன்போடு உங்கள் செயல் பழக்கவழக்கங்களை சீரமைத்துக் கொள்ளுங்கள். உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தின் வழியாகவும் வன்முறையை ஒரு நாளும், ஒரு பொழுதும் ஆதரிக்காதீர்கள் (உடல்ரீதியாகவும், மனரீதியாகவும்) தற்சோதனைக்கு உங்களை நீங்களே அர்ப்பணித்துக் கொண்டு முயன்று, உங்களை நீங்களே வழி நடத்துங்கள்.
🌿 இன்றைய பண்புப்பயிற்சி
🌿 வன்முறை இல்லாத வாழ்க்கை முறையை வாழ்வோம் உங்களுடைய உடலுக்கும், கருமையத்திற்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டுக்கொடுங்கள், தியாகம் செய்யுங்கள், சகித்துக் கொள்ளுங்கள், இதுவே ஆன்மீக பண்பாகும், அகிம்சை உணர்வாகும். இந்தப் பண்பில் வாழும்போதுதான் வாழ்க்கை வாழ்கிறது. "வாழ்க்கையாக இருப்பது சுத்தவெளி, இறைவன், தெய்வம்." வாழ்க வளமுடன்...
🌿 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌿 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment