வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 29
❄️🏮❄️🏮❄️🏮❄️🏮❄️🏮❄️
🚥 இன்றைய நித்தியக்கடன்
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 இன்றைய சாதகம்
🚥 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🚥 இன்றைய நற்சிந்தனை
🚥 எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் எப்போதும் தரத்தோடு இருக்கும் படியாய் அமைத்துக்கொள்ள வேண்டும். நாம் அவைகளை சரியாக கவனித்து அவ்வப்போது அவைகளுக்கு இடையே முளைக்கும் புல்லுருவிகளை கலைந்து கொண்டே இருக்கவேண்டும். மிகுந்த கவனத்தோடு இவைகளிடமிருந்து நாம் பாதுகாப்பு பெற்று விட்டால் போதும், அனைத்து வகையான சிக்கல்களையும் தவிர்த்துவிடலாம்.
🚥 இன்றைய தற்சோதனன
🚥 மனதின் மதிப்பு என்னவோ அதுதான் மனிதனின் மதிப்புமாகும். அதுவே தான் நம் வாழ்வின் அமைப்பாகவும் மலர்கிறது. ஆக ஒன்றினால் ஒன்று அதனதன் மதிப்பை ஒட்டியே அமைகிறது என்ற உண்மையை தெளிவாக புரிந்துகொண்டு மனதை மதிப்போடு வைத்து பழகுவதற்கு அனுதினமும் தற்சோதனை செய்யவேண்டும்.
🚥 இன்றைய பண்புப்பயிற்சி
🚥 ஒவ்வொரு நாளும் பல்வேறு கடமைகளையும், சூழ்நிலைகளையும் சந்திக்கின்றோம் இவைகள் அனைத்திலும் நாம் ஒரு நிறைவான பண்போடு இருந்து நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறாக இல்லாத பொது வாழ்க்கையில் ஏமாற்றமும், ஏழ்மையும், ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே நல்லதோர் பண்பில் நம்மை நாளுக்கு நாள் உயர்த்திக் கொள்வோம். வாழ்க வளமுடன்...
🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment