வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 28
💠💥💠💥💠💥💠💥💠💥💠
🍥 இன்றைய நித்தியக்கடன்
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 இன்றைய சாதகம்
🍥 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍥 இன்றைய நற்சிந்தனை
🍥 நிலத்துக்குள் இருக்கும் தனிமங்கள், உலோகங்கள் இவைகளுடைய கூட்டமைப்புக்கு ஏற்ப நிலம் மீது மரங்களும், செடிகளும், கொடிகளும் வளர்கின்றது. சில வகையான செடிகள் சில நிலப்பரப்பின் மீது மட்டும் தான் வளரும், சில வகையான செடிகள் எல்லா நிலப்பரப்பிலும் வளரும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை ஒன்றே ஒன்றுதான். "தகவமைவு கோட்பாடு"புறச் சூழலுக்கு ஏற்ப தனக்குள் உள்ளடங்கி இருக்கும் தன்மையை (அறிவை) தன் மாற்றம் செய்து கொள்வது இதுதான் தகவமைவு கோட்பாடு.
🍥 இன்றைய தற்சோதனன
🍥 ஓரறிவு இனத்துக்கே இவ்வளவு சிறப்பும், மதிப்பும் இருக்கும்போது, ஆறறிவு கொண்ட மனிதர்கள் நமக்குள் தகவமைவு கோட்பாடு இன்னும் தன்னை சிறப்பாகவே வெளிப்படுத்திக்கொள்ளும். அதற்கான வாய்ப்பை மட்டும் நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். இது மனவளக்கலை பயிற்சியால் மட்டுமே சாத்தியமாகும். நாள் தவறாது தற்சோதனை செய்து தெளிவு பெறுவோம்.
🍥 இன்றைய பண்புப்பயிற்சி
🍥 மனித இனம் தன்னைத்தானே உணரக்கூடிய ஆறாவது அறிவை சிறப்பாக பெற்றுள்ளது. இந்த அறிவு எதனையும் ஏற்றுக் கொள்ளுதல், எதனோடும் இசைந்து வாழ்தல்,இந்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்கள் எப்போது வாழ்கிறார்களோ, அப்போது அவர்களுக்கு ஞான கதவுகள் திறக்கப் படுகிறது. அந்த நொடியில் துவங்கி அந்தந்த நொடியிலேயே முடிகிறது. நம்முடைய தவறான செயல்கள் இக்கதவை அடைகிறது, சரியான செயல்கள் இக்கதவை திறக்கிறது. இறைநீதி ஒருநாளும் தவறான தீர்ப்புகளை வழங்காது. வாழ்க வளமுடன்...
🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment