வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
செப்டம்பர் 20
🫐🕸️🫐🕸️ 🫐 🕸️ 🫐 🕸️ 🫐 🕸️ 🫐
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ மனித வாழ்வின் உண்மையான வெற்றி என்பது, புறத்தில் நாம் பெறக்கூடிய வெற்றி மட்டும் போதாது. புறவாழ்க்கை வெற்றியில் அதனுடைய மதிப்பீடு நீடிப்பதும் நிலைப்பதுமில்லை. ஒருவருடைய சாதனையை இன்னொருவர் முறியடிக்கிறார். புறத்தில் நாம் பெறக்கூடிய வெற்றிகள் அனைத்தும் இவ்வாறு தான் அமையும். உயிர், மனம், அறிவு இவைகளை மதிப்பீடு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். இது தான் மனிதனுடைய உண்மையான வெற்றி.
♻️ இன்றைய தற்சோதனன
♻️ மனித வாழ்வின் வெற்றி என்பது அகத்தில் பெறக்கூடிய வெற்றியே உண்மையான வெற்றியாகும். நமக்குள் இருக்கும் விலங்கினத் தன்மையை வெற்றி காண வேண்டும். நம்முடைய போலி தன்மைகளை கலைவதில் நாம் வெற்றி பெற வேண்டும். இந்த வெற்றியானது நீடித்த நிலைத்த வெற்றியாக அமைகிறது. எங்கேயும், எப்போதும், எதற்காகவும் விலங்கினபதிவுகளிடம் நாம் தோற்று விடக்கூடாது. ஆக நமக்கும் அதற்க்குமான ஒரு இடைவெளியை உருவாக்கி, நாம் இறை தன்மையில் நிலைபெற்று விட்டால் நமக்கு தோல்வி கிடையாது.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ விலங்கினப்பதிவுகளின் எழுச்சி என்பது பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகளிடம் நாம் தோற்றுவிடக்கூடாது. இவைகளை நாம் வெல்ல வேண்டும். இந்த வெற்றியானது இறை ஞானத்தில் முழுமை பெறக்கூடிய வாழ்வியல் பண்பை உயர்த்துகிறது. நம்மை நாம் வெல்வோம் முறைதவறிய நம்மிடமிருந்து முறையான நாம் நாமாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment