நித்தியக்கடன் செப்டம்பர் 19 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 19


🌸🏝️🌸🏝️🌸🏝️🌸🏝️🌸🏝️🌸


💢 இன்றைய நித்தியக்கடன்


💢 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


💢 இன்றைய சாதகம் 


💢 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


💢 இன்றைய நற்சிந்தனை 


💢 அவரவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ என்ன இருப்பு அவரவர் கருமையத்தில்  இருக்கிறதோ அது காலத்தால் செயலுக்கு வந்தே தீரும். இது அவரவர்களுடைய பொறுப்பையும் கடமையையும்  உணர்ந்து தன்னுடைய எண்ணம், சொல், செயல்களை வெளிப்படுத்தும் விதத்திற்கும் நன்னடத்தைக்கும் ஏற்ப அமைகிறது. ஆக நமக்குள் என்ன இருக்கிறது, அதில் எவ்வளவு நன்மை தீமை இருக்கிறது, இதில் நன்மையை மேலோங்க செய்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் என்னென்ன, என்று தெரிந்து அதன் வழி செயலாற்ற வேண்டும்.


💢 இன்றைய தற்சோதனன


💢 ஒட்டு மொத்த விலங்கினுடைய தொகுப்பாக நாம் இந்த மனித உருவத்தை பெற்றிருக்கிறோம். ஆனால் இந்த மனித உருவமும் மனிதனுடைய கருமையமும் விலங்குகளினுடைய பண்பில் வாழ்வதற்கு உகந்தது அல்ல. மாறாக அவைகளை முறையான பயிற்சி மூலம் மாற்றி அமைத்துக் கொண்டு, மேலான ஞானப் பண்போடும், மனிதப் பண்போடும், இறைப் பண்போடும் வாழ்வதற்கே இம்மனித உருவமும், கருமையமும் அமைந்தது. இதனை நன்றாக தற்சோதனை செய்து ஆய்வு செய்வோமாக.


💢 இன்றைய பண்புப்பயிற்சி


💢 இப்பிறவியினுடைய நோக்க மாகிய விலங்கின பதிவுகளை போக்கிக் கொண்டு ஆறாவது அறிவில் முழுமை பெறுவதற்காகவே இம்மனிதப் பிறவியானது நமக்கு அமைந்தது. இப்பிறவிக்கு ஒத்த செயல் பண்புகளை ஏற்று அதன் வழியாகத்தான் நாம் நம் வாழ்க்கையை வாழவேண்டும். அதுவே வாழ்வினுடைய நோக்கமுமாகும். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து இவ்வுடலுக்கும், உயிருக்கும் தொண்டாற்றி இன்பம் காண்போம். வாழ்க வளமுடன்...    


💢 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💢 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments