நித்தியக்கடன் செப்டம்பர் 16 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 16


🔥⛳🔥⛳🔥⛳🔥⛳🔥⛳🔥


🕸️ இன்றைய நித்தியக்கடன்


🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🕸️ இன்றைய சாதகம் 


🕸️ திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🕸️ இன்றைய நற்சிந்தனை 


🕸️ மிகவும் பிரம்மாண்டமான, வசதிவாய்ப்புகள் நிறைந்த, பூரணத்துவம் வாய்ந்தது இந்த மனித பிறவி. அறிவின் குறைபாடு காரணமாக தன்னுடைய சுயத்தை இழந்து, தற்கால சூழ்நிலையில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும், இடையே போராடிக் கொண்டு இருக்கிறது. இந்த போராட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ள நிச்சயமாக நம்மால் முடியும்.


🕸️ இன்றைய தற்சோதனன


🕸️ எல்லாவிதமான நன்மைகளும் நமக்குள் பூரணமாக நிறைந்து இருக்கின்ற போதிலும், அவைகள் நம்மிடமிருந்து வெளிப்படாத வகையிலும் முறையிலும், நமக்குள் இருக்கக்கூடிய விலங்கின பதிவு அவைகளை தடுக்கிறது. இந்த பதிவை மட்டும் நாம் கண்டு  கொண்டால் போதும் நம்முடைய சுயம் நமக்குள் இருந்து வெளிப்படும்.இந்த அறிவின் குறைபாட்டை நீக்கி கொள்வது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்.


🕸️ இன்றைய பண்புப்பயிற்சி


🕸️ இதற்கு முறையான பயிற்சி, முயற்சி, தேர்ச்சி இவை இல்லாமல் நிச்சயமாக நம்முடைய பிரம்மாண்டம், நமக்கான வசதி வாய்ப்பு, பூரணத்துவம் இதனை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. அவைகளை முறையாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த யோக சாதனையை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நாள் தவறாமல் செய்யக்கூடிய செய்முறை பயிற்சியாக வழங்கி இருக்கிறார்கள். அன்று அன்று சேரும் அழுக்கை கசடை அன்றன்றே நீக்குவோம். வாழ்க வளமுடன்..‌.     


🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments