வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 04
🌸🫧🌸🫧🌸🫧🌸🫧🌸🫧🌸
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ இறை நிலையானது தன்னைத்தானே உணர்ந்து கொள்வதற்கு, இந்த மனித உருவத்தை எல்லாவகையிலும், அதற்கு உகந்த சரியான விகிதாச்சாரத்தில் உருவகப்படுத்தி இருக்கிறது. இந்த மனிதருக்குள்ளும் அதற்கு தகுந்த எல்லாவிதமான அமைப்புகளும் முழுமையாக உள்ளடங்கி இருக்கிறது. இதனை வெளிப்படுத்தி கொள்வதற்கு சரியானதொரு முறையான பயிற்சி தேவை. பயிற்சி இன்றி இது சாத்தியம் கிடையாது.
♻️ இன்றைய தற்சோதனன
♻️ உள்ளடங்கி முழுமையாக இருக்கும் இந்த வாய்ப்பினை மனிதர்கள், எவ்வாறு இது உள்ளடங்கி இருக்கிறது? என்ன செய்தால் இதனை வெளிக்கொணர முடியும்? அதற்கான முறையான பயிற்சி முயற்சி என்ன? என்பதை புரிந்து கொண்டு இந்த நிலையில் நின்று செயல்பட வேண்டும். இறைநிலையின் தன்மாற்றம் சரித்திரத்தில் மனித உருவத்திற்க்கு வித்து தொடராகவே வந்திருக்கிறோம். விலங்கின பதிவுகள்தான் நமக்குள் உள்ளடங்கி இருக்கக்கூடிய, இறைநிலையை உணர்வதற்கான வாய்ப்பை தடுக்கிறது.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவை அனைத்தும் விலங்கின பண்புகளாகும். இது மனித குணங்கள் இல்லை, இதற்கு நேரெதிராக நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சம உணர்வு, மன்னிப்பு இதுதான் மனித பண்பு. மனிதன் வாழவேண்டிய குணநலன்களாகும். "இறைவன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நாம்" இறைவனை வளர்ப்போம் விலங்கின் வீரியத்தை குறைப்போம். வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment