நித்தியக்கடன் செப்டம்பர் 01 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 01


🌀☘️🌀☘️🌀☘️🌀☘️🌀☘️🌀


🎱 இன்றைய நித்தியக்கடன்


🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🎱 இன்றைய சாதகம் 


🎱 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🎱 இன்றைய நற்சிந்தனை 


🎱 உடற்பயிற்சி நன்றாக இருக்கிறது, காயகற்பம் சிறப்பானதொரு பயிற்சி, தவம் அருமையாக இருக்கிறது. இவை அனைத்தும் இவ்வாறு இருப்பதற்கு விஞ்ஞானபூர்வமான காரணங்களை சிந்தித்து ஆய்வு செய்து, அவைகளை உங்கள் கருமயத்திற்குள் பதிவு செய்யுங்கள். எல்லாவிதமான செயல்களுக்கும் விஞ்ஞான, மெய்ஞான விளைவு இருக்கிறது. நன்றாக இருக்கிறது என்ற ஒரு வார்த்தை மட்டுமே போதாது, அதனை தாண்டி சிந்தித்து உணரமுயற்சி செய்யுங்கள்.


🎱 இன்றைய தற்சோதனன


🎱 எந்த ஒன்று விளைவாக அமைந்தாலும், அது ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று கேள்வி கேட்டு அந்த கேள்விக்குரிய விடையை விஞ்ஞானப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு வாழ்வில் நடைபெறக்கூடிய அத்தனை நிகழ்ச்சிகளுக்கும், என்ன காரணம்? என்று உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்க வேண்டும். அதுதான் ஆன்மீக வாழ்வாகும்.


🎱 இன்றைய பண்புப்பயிற்சி


🎱 மேம்போக்காக எந்த ஒன்றையும் எடுத்துக்கொள்ளாமல், அதனுடைய அடித்தளத்தை உணரக்கூடிய பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஊக்கப்படுத்தினால் தான் உங்கள் மனமும் உயிரும் ஊக்கம் பெறும். உயிரையும் மனதையும் அடியாளத்திற்க்கு கொண்டு சென்று, அறிவோடு இணைந்து நின்று மெய்ஞான அனுபவத்தில் நாளுக்குநாள் சிறந்து விளங்குவோமாக. வாழ்க வளமுடன்..‌.        


🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments