வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 30
🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️
🎉 இன்றைய நித்தியக்கடன்
🎉 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎉 இன்றைய சாதகம்
🎉 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🎉 இன்றைய நற்சிந்தனை
🎉 அஃக்றிணை உயர்திணை என்று எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் அதனதன் கருமையத்திலேயே, இருந்துகொண்டு அதன் தன்மைக்கும் தரத்திற்கும் ஏற்ப இப்பேரண்டத்தையும் உலக உயிர்களையும் உருமாற்றிக் கொண்டு, உணர்வுகளை உயர்த்திக்கொண்டு, தானும் அதுவாக இருந்துகொண்டும் அனைத்தையும் இயக்கிக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறது இறைநிலை.
🎉 இன்றைய தற்சோதனை
🎉 ஒவ்வொரு மனிதனுடைய அறிவும், திறமையும், ஆற்றலும் அளவிட முடியாத அளவிற்கு இருக்கிறது. ஆனால் மனிதர்களால் அவைகளை சரியாக ஊக்குவித்து கொள்ள முடிவது இல்லை. அதனை ஊக்குவித்து கொள்வதற்கு பெயர்தான் யோக சாதனை என்று முன்னோர்களால் வழங்கப்பட்டது. யோகா என்பது வாழ்வியல் உண்மை. அதனோடு இணைந்து இயங்கி பழகும்போது தான் அதனுடைய ஆழம், அகலம், நீளம் அனைத்தும் புரியும்.
🎉 இன்றைய பண்புப்பயிற்சி
🎉 யோக சாதனை என்பது தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது மட்டும் அல்ல. அதுவாகவே தன்னை மாற்றிக்கொண்டு அனுபவத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதே ஆகும். இந்த பிரம்மாண்டமான தன்மாற்ற சரித்திரத்தை, நம்முடைய வரலாற்றை நம்முடைய சொந்த கதையை நாமே அறிந்து கொள்வதற்கான முயற்சியில் நம்மை வெற்றி பெறவே இந்த மனவளக்கலை யோகப் பயிற்சியை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருள் இருக்கிறார்கள். வாழ்க வளமுடன்...
🎉 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎉 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment