வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 29
🎱🏵️🎱🏵️🎱🏵️🎱🏵️🎱🏵️🎱
🚥 இன்றைய நித்தியக்கடன்
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 இன்றைய சாதகம்
🚥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி,
பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🚥 இன்றைய நற்சிந்தனை
🚥 அணுக்களின் வலச்சூழல், இடச்சுழல், சுழல் வேகவிரைவுக்கு ஏற்பவும், உண்ணும் உணவு, பருவகால ஏற்றத்தாழ்வு, இவை அனைத்திற்கும் ஏற்ற அந்த உடலில் ரசாயனம் மாறும், குணம் மாறும். ஆகவே உடலிலுள்ள ஓட்டங்கள் அனைத்தையும் எப்போதும் நாம் சீராக பராமரிப்பதற்காகவே, நமக்கு உடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
🚥 இன்றைய தற்சோதனை
🚥 நாள் தவறாமல் எளியமுறை உடற் பயிற்சியை செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் யாவும் சீராக அமைந்து இயங்குகிறது. உடல் அடையும் ரசாயன மாற்றத்திற்கு ஏற்ப நம் எண்ணங்களும் பலவிதமான மாற்றங்களை எதிர்கொள்கிறது. ஆகவே நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வோம், தற்சோதனை செய்து உண்மையை உணர்வோம்.
🚥 இன்றைய பண்புப்பயிற்சி
🚥 நமக்குள் இருக்கும் மனிதப் பண்பு மேலோங்க வேண்டுமானால், அதற்குரிய செயல் நம்மிடையே எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதப் பண்பு நமக்குள் மேலோங்கும். இந்த சரீரம் விலங்கின பண்பால் உருவானது. மனித பண்புக்கு நாம்தான் முயற்சி செய்து மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அன்பும் கருணையும் இயல்பாகக் கொண்டு உடற்பயிற்சி, தவம், தற்சோதனை, காயகல்பம் இவைகளை செய்யும்போது மனிதப் பண்பு நம்முள் உயர்வதை உணரலாம். வாழ்க வளமுடன்...
Comments
Post a Comment