வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 22
🪻🍀🪻🍀🪻🍀🪻🍀🪻🍀🪻
🌌 இன்றைய நித்தியக்கடன்
🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌌 இன்றைய சாதகம்
🌌 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌌 இன்றைய நற்சிந்தனை
🌌 உயிரில் இருக்கக்கூடிய கோடானகோடி உண்மைகளை எல்லாம் உயிருக்குள் ஒதுங்கி நின்றால் தான் நம்மால் உணர முடியும் இந்த உண்மைகளை உணர்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் மனிதனுக்குள் பூரணமாக இருக்கிறது முறையான பயிற்சியை மேற்கொண்டு தன்னார்வத்தோடு முயற்சி செய்யும் போது படிப்படியாக நம்மால் இதில் வெற்றி பெற முடியும். முடியும் என்ற நம்பிக்கையை முதலில் நமக்குள் விதைப்போம் அது முளைத்து எழுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அதற்கு வழங்குவோம்.
🌌 இன்றைய தற்சோதனன
🌌 உயிருக்குள் மனதை நடுங்கச் செய்து மனதை முழுமையாக உயிராகவே மாற்றும் முயற்சி யோக சாதனை ஆகும் இந்த சாதனை மார்க்கத்தில் நமக்கு பேருதவியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய வேதாத்திரியம் முழுமையாக நம்மை நமக்குள் அழைத்துச் செல்லும் சிறப்பான பயிற்சிகள் அனைத்தும் உள்ளடக்கமாக பெற்றதாகும் நம்பிக்கையோடும் நெஞ்ச துணிவோடும் இந்த முயற்சியில் நம்மை நாமே முன்னடத்திச் செல்லவோம் இந்த அகநோக்கு பயணத்தை இனிதே துவங்குவோம்.
🌌 இன்றைய பண்புப்பயிற்சி
🌌 கண்களுக்கு புலப்படாத துகள் துகலாக உயிர் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உயிருக்குள் ஒடுங்கினால் தான் உயிரினுடைய உண்மையை மனதால் உணர்ந்து கொள்ள முடியும் மனம் புறத்தில் விரிந்து இயங்கிக் கொண்டே இருந்தால் உன்னுடைய உண்மையை தன்மையை மனதினால் ஒரு நாளும் ஒரு பொழுதும் உணர்ந்துகொள்ள முடியாது உயிரின் மத்திம பொருளுக்குள் ஒடுங்கி அதுவாகி உணர வேண்டிய உண்மைகள் ஏராளமாக இருக்கிறது வாழ்க வளமுடன்...
🌌 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌌 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment