வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 18
🫐🍀🫐🍀🫐🍀🫐🍀🫐🍀🫐
💠 இன்றைய நித்தியக்கடன்
💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 இன்றைய சாதகம்
💠 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
💠 இன்றைய நற்சிந்தனை
💠 வீண் பேச்சு, கவலை, மனக்குழப்பம், ஒழுங்கற்ற எண்ண ஓட்டம், உணர்ச்சி வயப்படுதல் போன்ற செயல்பாடுகளால் சீவகாந்தம் விரயமாகிறது. மேலும் எதிரிகளை, வாழ்க்கை சிக்கல்களை உருவாக்குகிறது. இதற்கு பல்வேறு முறைகளில் சிந்தித்து தெளிவு பெற வேண்டியிருக்கிறது. தற்சோதனை மூலமாகத்தான் அமைதியையும், ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதன் பின்னரே விரயங்களை தவிர்க்கலாம், சீவகாந்தமும் போதிய அளவு நிரம்பி நிற்கும்.
💠 இன்றைய தற்சோதனன
💠 விளையாட்டாக நம்முடைய எண்ணம், சொல், செயல்களை பயன்படுத்துபோது விபரீதமாக முடிகிறது. நல்லதைச் செய்வதற்கு நமக்குள் ஒரு சாதனை இலக்கை வைத்துக் கொள்வோம். அதனை அடைய முயற்சி செய்வோம். முடியும் வரை முயற்சி செய்வோம், அதற்கு பொறுமை வேண்டும். ஒவ்வொரு சின்னச் சின்ன சூழ்நிலைகளையும் தற்சோதனை செய்து கவனத்தோடு கையாள வேண்டும்.நம் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் அனைத்துமே நம் உடலில், மனதில், உயிரில் இருந்தே துவங்குகிறது என்பதை மறந்து விடக்கூடாது.
💠 இன்றைய பண்புப்பயிற்சி
💠 போட்டி, பொறாமை, வஞ்சம், பகை, பிணக்கு இவைகளுக்கு நமக்குள் இடம் கொடுக்காமல் வாழ முயற்சி செய்யும்போது மட்டுமே, நம்மால் ஆன்மீக அனுபவத்திலும் உயர்வு பெறுமுடியும். உடல், மனம், அறிவு இவைகளை உயரிய இடத்தில் நிலை நிறுத்தவும் முடியும். ஆரோக்கிய நிலையை இயல்பாக அமைத்துக் கொள்ளவும் முடிகிறது. வாழ்க வளமுடன்...
💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment