வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 15
💥🎱💥🎱💥🎱💥🎱💥🎱💥
🕸️ இன்றைய நித்தியக்கடன்
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. அனைவரும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்
🕸️ இன்றைய சாதகம்
🕸️ வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🕸️ இன்றைய நற்சிந்தனை
🕸️ எந்த வகையான தொழிலிலும் நாம் முன்னேற வேண்டுமானால், அது சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அறிவில் உயராத பட்சத்தில் இதில் வெற்றிகாண்பது என்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இதுபோலத்தான் நம் வாழ்க்கையை உடல், உயிர், மனம் இதன் மூலமாகத்தான் வாழ்கிறோம். ஆனால் அவை என்ன என்று புரியாததாலும், தெரியாததாலும் பல்வேறுபட்ட இன்னல்களையும், இடர்பாடுகளையும் வாழ்க்கையில் சந்திக்கின்றோம்.
🕸️ இன்றைய தற்சோதனை
🕸️ இப்போது புரிகிறதா நம் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களுக்கும் துன்பங்களுக்கும் என்ன காரணம் என்று. உடல், உயிர், மனம் இவை எல்லாம் என்ன..? யாரால் இவைகள் இயக்கப் படு்கிறது.? எதனை பயன்படுத்துகிறோமோ அதனைப் பற்றிய தெளிவும், அறிவும் நமக்கு இல்லை. இதுவே நம் வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களுக்கும் துன்பங்களுக்கும் மூலகாரணமாக உள்ளது. இதனை ஆழமான சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு தற்சோதனை செய்து வாழ்வில் உயர்வோம்.
🕸️ இன்றைய பண்புப்பயிற்சி
🕸️ விடாமுயற்சி, வைராக்கியம் எந்த அளவுக்கு நமக்குள் ஆழமாகவும், அகலமாகவும் வேரூன்றி இருக்கிறதோ அந்தளவுக்கு நம்மால் இறையுணர்வில் உயர முடியும். இறைவனை உணர்வதற்காகவே உருவான பிறப்பு இது. இந்த பிறவியுனுடைய முழுமையான சிறப்பில் நம்மை இணைத்துக் கொள்வோம் விடாமுயற்சியோடு திட்டமிட்டு செயல் புரிவோம். வாழ்க வளமுடன்...
🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment