நித்தியக்கடன் ஆகஸ்ட் 12 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 12


🍀💐🍀💐🍀💐🍀💐🍀💐🍀


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎲 இன்றைய சாதகம் 


🎲 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🎲 இன்றைய நற்சிந்தனை 


🎲 நமக்குள்ளிருக்கும் அறியாமை, விலங்கினத் தன்மை,   தேவையில்லாத பழக்க, வழக்கம் அனைத்தையும் நாசம் செய்ய வேண்டும். படிக்கும் புத்தகமும், மேற்கொள்ளும் பயிற்சியும் இந்த விளைவைத் தருமேயானால் அது நமக்கு கிடைத்த வரம். புலன் உணர்ச்சிகளுக்குள் மயங்கி, சிக்கி மீளமுடியாமல் புதைந்து கிடக்கும் இந்த மனோநிலையில் இருந்து நம்மை பாதுகாக்கக் கூடிய  பயிற்சி முறையை, தாற்சோதனை மூலமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.


🎲 இன்றைய தற்சோதனை


🎲 அத்தகைய பயிற்சி முறையால் நமக்குள் இருக்கும் நஞ்சு கழுவிக்களையப்பட வேண்டும். இந்த சிறப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து உள்ளடங்கியதே வேதாத்திரியம். விவேகமும் தேவை, வேகமும் தேவை ஒன்றினால் ஒன்று பாதிப்படையாத வண்ணம், வழி முறையை வகுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு அமைந்த இறுதிவாய்ப்பு என்று எண்ணி வேதாத்திரியத்தோடு வாழ்க்கை பயணத்தை இனிதே துவங்குவோம்.


🎲 இன்றைய பண்புப்பயிற்சி


🎲 பயிற்சிமுறை கிடைத்தபின் எப்பாடுபட்டாவது அதனைதக்க வைத்துக் கொண்டு, விடாமுயற்சியோடு இருந்து முன்னேற வேண்டும். தொலைநோக்காளர் சிந்தனையோடும் விசாலமான அறிவோடும்,  விசயஞானத்தோடும் திட்டமிட்டுக் கொண்டு படிப்படியாக முன்னேறுவோம். வாழ்க வளமுடன்...     


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments