நித்தியக்கடன் ஆகஸ்ட் 10 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 10


🎉🌞🎉🌞🎉🌞🎉🌞🎉🌞🎉


🏮 இன்றைய நித்தியக்கடன்


🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🏮 இன்றைய சாதகம் 


🏮  சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.


🏮 இன்றைய நற்சிந்தனை 


🏮 முயற்சிக்கு நீங்கள் தான் முன்னுதாரணம் என்று இந்த உலகிற்கு உங்களை நீங்கள் விசாலமாக அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் மனிதர்களுக்கு முன்னும் பின்னும் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இறைநிலையின் தன்மாற்றச் சரித்திரத்தில் மனிதன் மிகச்சிறந்த தன்மாற்றமாகும். மனதிற்கு மனம் உண்மை என்பது வேறுபடுகிறது, மாறுபடுகிறது. அவரவர்களுடைய அனுபவ அறிவைப் பொறுத்து இவ்வாறு அமைகின்றது.


🏮 இன்றைய தற்சோதனை


🏮 கலப்படமில்லாமல் உங்களுடைய அனுபவத்தை தெள்ளத்தெளிவாக உயர்த்திக் கொள்ளும் முயற்சி மிகவும் சாலச் சிறந்ததாகும். விடியும் என்று விண்ணை நம்புங்கள், முடியும் என்று உங்களை நம்புங்கள். இது துவக்கத்துக்கும் முடிவுக்குமான வாழ்க்கைப் பயணம். நாம் ஒன்றும் சிறு வாக்கியம் அல்ல, நீண்ட நெடிய வரலாற்றுக் காப்பியம். மனிதனுக்குள் அடங்கியிருக்கும் அளவிட முடியாத சக்தியை வகைப்படுத்தி, முறை படுத்திக்கொண்டால் விரிவடையும் "பிரம்மஞானம்".


🏮 இன்றைய பண்புப்பயிற்சி


🏮 அது அதனை அது அதுவாய் உணரக்கூடிய பண்பில் மனிதர்கள் நாளுக்கு நாள் மேலோங்க வேண்டும். இயற்கையின் உண்மைகளை கலப்படமில்லாமல் மயக்கமில்லாமல், தெள்ளத்தெளிவாக உள்ளதை உள்ளவாறு உணர்ந்து வாழ்க்கையில் அனுபவமாக்கிக் கொள்ளலாம். இறைநிலையின் தான்மாற்றச்சரித்திரமும் மனிதனுடைய வரலாறும் அவர்களுடைய சொந்தக் கதை  ஆகும். நம்முடைய சரித்திர உண்மைகளை வரலாற்று நிகழ்வுகளை புரட்டிப் பார்க்க தயாராவோம். வாழ்க வளமுடன்...     


🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments