வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 07
🎲🌀🎲🌀🎲🌀🎲🌀🎲🌀🎲
🌾 இன்றைய நித்தியக்கடன்
🌾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌾 இன்றைய சாதகம்
🌾 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🌾 இன்றைய நற்சிந்தனை
🌾 மனிதனுடைய வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. நன்மைகளை செய்ய முயற்சிக்கும் போது அதற்கு, நிறைய இடற்பாடுகள் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுகின்றன. ஆனால் தேவையில்லாத பழிச்செயல் பதிவுகளை (பொய், சூது, களவு, கற்பழிவு, கொலை) பஞ்சமாபாதகங்களை செய்வதற்கு விரைவாகவும், எந்தவிதத் தடையும் இல்லாமலும் அவைகளை சுலபமாக செய்து முடிக்கப் படுகிறது.
🌾 இன்றைய தற்சோதனை
🌾 தியானம், தற்சோதனை,உடற்பயிற்சி, காயகல்பம் இல்லாமல் இதனை புரிந்து கொள்வதும், இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதும், விடுவித்துக் கொள்வதும் இயலாத காரியம். நாம் மொத்த விலங்கினத்தினுடைய தொகுப்பு, விலங்கினத்தின் ஒட்டுமொத்த அடையாளம். இக்காரணத்தினாலேயே சுலபமாக நம் தீமைகளை செய்வதற்க்கு, உண்டான வழிவகை வாய்ப்புகள் அமைந்துவிடுகின்றன.
🌾 இன்றைய பண்புப்பயிற்சி
🌾 விளங்கினர் பண்பான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகளுக்கு நேர் எதிரான மனித பண்பான நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர்நிறை சம உணர்வு, மன்னிப்பு இவைகளில் ஆழ்ந்து ஓங்கி வளர்ந்தால் , தீமைகளை செய்வதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இது போராட்டம் நிறைந்த வாழ்க்கைதான். தற்காலச் சூழலலில் நாம் இந்த போராட்டத்தை நமக்குள்ளாகவே நடத்திக் கொண்டிருக்கிறோம். வேதாத்திரியத்தின் துணைகொண்டு வென்றே தீருவோம். வளர்க வேதாத்திரியம். வாழ்க வளமுடன்...
🌾 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌾 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment