நித்தியக்கடன் ஆகஸ்ட் 03 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 03


🪻💠🪻💠🪻💠🪻💠🪻💠🪻


🏵️ இன்றைய நித்தியக்கடன்


🏵️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🏵️ இன்றைய சாதகம் 


🏵️ சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.


🏵️ இன்றைய நற்சிந்தனை 


🏵️ பலதரப்பட்ட நினைவுகள் உருவாகின்றன. அவை  மனதுக்குள் உலாவுகின்றன. இந்த நினைவுகளை  உங்களிடமிருந்து விளக்கிவைத்து பார்க்க முயற்சி செய்யுங்கள். இதில் வெற்றி பெறுவதே யோக சாதனையாகும். உங்களுடைய நடை, உடை, பாவனை, செயல்கள் அனைத்தையும் தூர நின்று கவனித்து பழகுங்கள். உங்களை நீங்களே கண்காணித்து பாருங்கள் பழகுங்கள். பலதரப்பட்ட உண்மைகள் மனதிற்கு அறிவின் வழியாக விளங்கும்.


🏵️ இன்றைய தற்சோதனை


🏵️ இதில் வாழ்ந்து முயற்சித்து முன்னேற முன்னேற, இயற்கையின் பெருமையை இறைவனின் தன் மாற்ற சரித்திர வரலாற்றை, நமது அனுபவமாக்கிக் கொண்டு  உயர்வதற்கு வாய்ப்புகள் கூடும். மனவழியாகவும், உடல் வழியாகவும், உயிர் வழியாகவும் இதற்குண்டான முயற்சியும், பயிற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இதற்கான வெற்றி சாத்தியமாகும். தற்சோதனை செய்து அனைத்தையும் சீர்தூக்கி உணர்ந்து உயர்வோம்.


🏵️ இன்றைய பண்புப்பயிற்சி


🏵️  மறுபடியும் மறுபடியும், மனம் மயங்கவே செய்யும். இருந்தபோதும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து விழிப்புடன் இருந்து, இந்த இறைஞான பயணத்தில் நிறைவுகாண்போம். தன்னந்தனியாக போராடுகிறோம் என்ற சிந்தனையை அறவே அகற்றுவோம். நமக்கு உறுதுணையாக, பாதுகாப்பாக தன்நிலை உணர்ந்த பெரியோர்கள். அத்துணைபேரும் இருக்கிறார்கள் வாழ்க வளமுடன்...


🏵️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🏵️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments