வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 29
❄️🌸❄️🌸❄️🌸❄️🌸❄️🌸❄️
🛟 இன்றைய நித்தியக்கடன்
🛟 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🛟 இன்றைய சாதகம்
🛟 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🛟 இன்றைய நற்சிந்தனை
🛟 தாவரங்கள், ஊர்வன, பறப்பன, நடப்பன, கோள்கள், நட்சத்திரங்கள் இந்த பிரபஞ்சம். இவை அனைதினுடைய தன்மையும் நமக்குள் இருக்கிறது. இவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு வேலை வளர்த்துக் கொள்ளாமல் அப்படியே இருந்து விட்டால்..? நம்முடைய எண்ணம், சொல், செயல் இவைகளின் வழியாக விலங்கின தன்மையே வெளிப்படும்.
🛟 இன்றைய தற்சோதனை
🛟 திட்டமிட்டுக் கொண்டு முறையாக பயிற்சியை மேற்கொள்ளும்போது நமக்கான அறிவும், திறமையும் நாளுக்கு நாள் மேலோங்கும். இதில் ஆங்காங்கே இடைஞ்சல்களும், இடர்பாடுகளும், வரலாம். அவை அனைத்தையும் முறையாக சிந்தித்து செயல் திட்டங்களை வகுத்து கடப்போம். தற்சோதனை இந்த திட்டங்களுக்கு நமக்கு பக்கபலமாகவும், உதவியாகவும் இருக்கும்.
🛟 இன்றைய பண்புப்பயிற்சி
🛟 எதையெல்லாம் நாம் இந்த பூமியில் பெறுகிறோமோ, அவையனைத்தும் நமக்காக இறைவன் அன்போடு வழங்கியதாகும். இதை முறையாக சிந்தித்து ஒழுங்கு படுத்திக்கொண்டு நாமாக பெறவும் முடியும். அதற்கான புதிய செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு திட்டமிட்டு வாழ்வில் உயர்வோம் வாழ்க வளமுடன்...
🛟 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🛟 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment