வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 28
💯🕸️💯🕸️💯🕸️💯🕸️💯🕸️💯
🫧 இன்றைய நித்தியக்கடன்
🫧 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🫧 இன்றைய சாதகம்
🫧
🫧 இன்றைய நற்சிந்தனை
🫧 தன்னை தானே உணர்ந்து கொள்ள, தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள, இறைநிலை எடுத்த முயற்சி தான் பௌதீக நிலைகளாக இறைநிலை தன்மாற்றம் கொண்டது. இந்த பஞ்ச பூதங்களாக இறைநிலை தன்மாற்றம் பெற்றபின் ஒன்றை ஒன்று பார்க்கவும், உணரவும், தரிசிக்கவும், சுவைக்கவும் எண்ணம் வந்த போது ஜீவ இனம் தோன்றியது. புல், பூண்டு, ஊர்வன, நடப்பன என முறையாக தன்மாற்றம் கொண்ட இறைநிலை கடைசியாக மீண்டும் இறைநிலையோடு இணைய வேண்டும், என்ற முயற்சியின் விளைவு மனிதனாக இறைநிலை தன் மாற்றம் கொண்டது.
🫧 இன்றைய தற்சோதனை
🫧 நம்முடைய வரலாறு நீண்ட நெடிய வரலாறு. இந்த பிரபஞ்சம் தோன்றியது முதல், இந்த பிரபஞ்சத்தில் உயிரினமாக உள்ள நாம் வரை, இவை அனைத்துமே நம்முடைய சொந்த கதை, நம்முடைய சரித்திரம். நாம் நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். நாம் சாதாரணமானவர்கள் அல்ல. உங்களுக்குள் இருக்கும் உண்மையை உணரத் துவங்கி விட்டால் எல்லா வகையான அனுபவமும் உங்களுடையதாகும். "இறைநிலையின் தன்மாற்ற சரித்திரம்".
🫧 இன்றைய பண்புப்பயிற்சி
🫧 வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்ட பயிற்சிகள் அனைத்தும் ஞானமாகவே கொடுத்திருக்கிறார்கள். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவை யாவும் ஞானம் விளைவிக்கும் ஞானச் செயலாகும். இந்த ஞானச் செயலில் உங்களை ஒவ்வொரு கணமும் இணைத்துக் கொண்டு, உள்ளும் புறமும் உள்ள இறைநிலையை உணர்வோமாக. ஞானம் கொண்டு ஞானம் செய்வோம் வாழ்க வளமுடன்...
🫧 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🫧 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment