நித்தியக்கடன் மே 26 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 26


⛰️🚥⛰️🚥⛰️🚥⛰️🚥⛰️🚥⛰️


🌀 இன்றைய நித்தியக்கடன்


🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌀 இன்றைய சாதகம்


🌀 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🌀 இன்றைய நற்சிந்தனை

  

🌀 மனிதர்களுடைய வாழ்க்கை பயணம் என்பது, எப்போதும் ஒரேமாதிரி இருப்பது இல்லை. சில சமயம் சமமான பாதையில் செல்வது போலவும், சில சமயம் கரடுமுரடான பாதையில் செல்வது போலவும், சில சமயம் ஏற்ற இறக்கத்தோடும் அமைகிறது. சிலர் வாகனத்தில்  பயணிக்கிறார்கள், சிலர் நடைபயணமாகவே செல்கிறார்கள், வாகனம் செல்ல முடியாத இடம் நிச்சயமாக உண்டு. அப்போது இறங்கி நடந்து தான் செல்ல வேண்டும். மனிதவாழ்க்கை பயணம் இவை  எல்லாவற்றையும்  உள்ளடக்கமாக கொண்டதே ஆகும்.


🌀 இன்றைய தற்சோதனை


🌀 ஏற்ற இறக்கங்கள் வரும் போது கவனமாக இருக்க வேண்டும். நடந்து செல்லக்கூடிய சூழ்நிலை வரும்போது இறங்கி நடந்து செல்வதற்கு தயங்கக்கூடாது. நான் எல்லாவிதமான சுழ்நிலைகளிலும் ஒரேமாதிரியாக தான் இருப்பேன் என்று முடிவெடுத்துக் கொண்டு, நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. நம்மை  சார்ந்தவர்களை ஏமாற்றி விடவும் கூடாது.


🌀 இன்றைய பண்புப்பயிற்சி


🌀 எது எப்படியானாலும் இவை அனைத்தையும் சமப்படுத்த கூடிய பயிற்சி முறைகளை, பண்புகளை அன்றாட வாழ்க்கையில்  இணைத்துக் கொண்டு, ஒவ்வொரு கணமும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஆய்வு செய்து கொண்டு, நம்முடைய குணத்தை எப்போதும் மேன்மையோடு வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள, எது நடந்தாலும் அதை எதிர் கொள்ள நம்மை எப்போதும் தயார்படுத்திக் கொண்ட நிலையிலேயே வாழ்க்கையை வாழவேண்டும். வாழ்க வளமுடன்...


🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments