நித்தியக்கடன் மே 24 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 24


⭕❄️⭕❄️⭕❄️⭕❄️⭕❄️⭕


🎉 இன்றைய நித்தியக்கடன்


🎉 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎉 இன்றைய சாதகம்


🎉 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


🎉 இன்றைய நற்சிந்தனை

  

🎉 வாழ்க்கையில் சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் உங்களை மாற்றும் அல்லது நீங்கள் அவைகளை மாற்றுவீர்கள். இந்த இரண்டுமே சாத்தியம்தான் தவயோகிகளுக்கு. இந்த குண்டலினி யோகப் பயிற்சியை முறையாகக் கற்று பயின்று நாள் தவறாது தன்னை பயிற்சியில் விருப்பத்தோடும், இன்முகத்தோடும், ஆர்வத்தோடும், கவனத்தோடும் மற்றும் தன்னை இணைத்துக் கொள்ளும் அனைவருக்கும் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைப்பது என்பது சாத்தியமே. இதுபோக நம் கர்மவினை தன்மைகளுக்கு ஏட்ப நம் வாழ்க்கை சூழ்நிலைகளும் நம்மை மாற்றக்கூடியதே.


🎉 இன்றைய தற்சோதனை


🎉 நிதானமாகவும், அமைதியாகவும், மனப்பக்குவத்தோடும் நடந்து கொள்ளும்போது. வாழ்க்கை சூழ்நிலைகளால் நம்மை பெரிதாக மாற்ற இயலாது, தீமையான பழக்க வழக்கங்களில். சந்தர்ப்ப சூழ்நிலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது நடைமுறையில் சாதாரணமாக இயலாத காரியம் ஆனால் உடல்பயிற்சி, தவம், காயகல்பம், தற்சோதனை இவைகனின் துணை கொண்டு நிச்சயமாக சாதிக்க முடியும்.


🎉 இன்றைய பண்புப்பயிற்சி


🎉 என்ன நடந்தாலும் நம்முடைய கருமைய தன்மைக்கு ஏற்ப தான் நடைபெறும். இந்த கருமையை தன்மையை மாற்றி அமைத்துக் கொள்ளும் முறைதான் ஞான யோகம். இந்த ஞான யோகத்தில் சிறந்து விளங்குவதற்கு ஆராய்ச்சியோடு அனைத்தையும் சிந்தித்து உணரும் பண்பில் உயர்வு பெற வேண்டும். இந்த பண்பு மனித வாழ்க்கையின் சிறப்புக்களை உயர்த்தக் கூடியது பண்பாகும். வாழ்க வளமுடன்...


🎉 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎉 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments