நித்தியக்கடன் மே 21 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 21


🔥🫧🔥🫧🔥🫧🔥🫧🔥🫧🔥


🕸️ இன்றைய நித்தியக்கடன்


🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🕸️ இன்றைய சாதகம்


🕸️ செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


🕸️ இன்றைய நற்சிந்தனை

  

🕸️ ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரையை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்தால்  சிறிது நேரத்தில் தண்ணீரில் நாட்டு சர்க்கரை கரைந்துவிடும். அந்த தண்ணீரில் நாட்டு சர்க்கரையை கண்ணால் காண முடியாது. அதனுடைய தன்மையாகிய இனிப்பு சுவை மட்டும் நீரில் இருக்கும். நாட்டு சர்க்கரைக்கு பதிலாக கூழாங்கற்களை போட்டால் அந்த கல்லும் கரையாது, நீரில் எந்த சுவையும் தெரியாது.


🕸️ இன்றைய தற்சோதனை


🕸️ கடும்பற்று, உணர்ச்சி வயப்படுதல், கவலை, சினம், பொறாமை, வஞ்சம் இவைபோன்ற குணங்களை அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுத்தினால், நாம் இறைநிலையோடு ஒன்றவும் முடியாது, அதில் கலக்கவும் முடியாது, நாம் கரையவும் முடியாது. எதார்த்தமான சிந்தனையோடு வாழ்க்கையை எப்போதும் மனநிறைவாக வாழ்பவருக்கு இறைகலப்பு சாத்தியம்.


🕸️ இன்றைய பண்புப்பயிற்சி


🕸️ இறைநிலையின் தரத்தோடும் தன்மையோடும் எவரொருவர் வாழ்கிறாரோ, தனக்கு யாரெல்லாம் அவரவருக்குள் இடம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குள் இறைநிலை பூரணமாக இயங்கும்.  அவர்களோடு இணைந்து தன்னை அவர்களுக்கு அர்ப்பணிக்கும். அவரவர்களுடைய சொந்த தனி முயற்சியே இதனை சாதிக்க வல்லதாகும். "நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும், துன்பம் தரமாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்" வாழ்க வளமுடன்...


🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments