நித்தியக்கடன் மே 20 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 20


🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀


🌸 இன்றைய நித்தியக்கடன்


🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌸 இன்றைய சாதகம்


🌸 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🌸 இன்றைய நற்சிந்தனை

  

🌸 தூண்டுதல்கள் இல்லாமல் நம்மால் ஒரு செயலில் முழுமையாக நாம் விரும்பி ஆர்வத்தோடு "ஈடுபடுதல்" என்பது, அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஏதேனும் ஒரு வகையில் நமக்கு தூண்டுதல் தேவை படுகிறது. இந்த தூண்டுதலை வெளியில் தேடாமல் நமக்குள்ளாக நாமே ஏன் அமைத்துக் கொள்ளக் கூடாது. நமக்குள்ளாக இதை அமைத்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை அறிவுப்பூர்வமாக வாழ்வதற்கு முயல்வோம். 


🌸 இன்றைய தற்சோதனை


🌸 நம்மீது நாமே கவனம் செலுத்துவோம் நம்முடைய செயல்களெல்லாம் நாமே ஒழுங்குபடுத்திக் கொண்டு ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு பொழுதும் நமக்கு அமையும் சூழ்நிலைகளை ஆராய்ச்சி செய்யும்போதும், தற்சோதனை செய்யும்போதும், அதன் விளைவாக இந்த பிரபஞ்சத்தில் உள்ள இயற்கையினுடைய ரகசியங்கள் அனைத்தும் நமக்கு தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.


🌸 இன்றைய பண்புப்பயிற்சி


🌸 அகத்திலும், புறத்திலும் உள்ள அறிவின் தன்மை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இடையில் நின்று சாட்சியாக இருக்கிறது. இந்த சாட்சியாக இருக்கும் இறைநிலையோடு சற்று விசாலமாக ஆழமாக நம்மை இணைத்துக் கொண்டு எப்போதும் விழிப்பு நிலையோடு வாழும் பணியில் உயர்வு பெருவோம் வாழ்க வளமுடன்...


🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments