வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 16
🏝️🌀🏝️🌀🏝️🌀🏝️🌀🏝️🌀🏝️
🏕️ இன்றைய நித்தியக்கடன்
🏕️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏕️ இன்றைய சாதகம்
🏕️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🏕️ இன்றைய நற்சிந்தனை
🏕️ கண்களால் பார்க்க முடிகிறது என்பதற்காக ஒரு நிகழ்ச்சி நிஜமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, பொய்யாகவும் இருக்கலாம். கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக ஒரு நிகழ்ச்சி நிஜம் இல்லாமல் போகாது, அது உண்மையாகவும் இருக்கலாம். தெள்ளத் தெளிவாக எந்த ஒன்றையும் உணர்ந்து, புரிந்து கொள்ள வேண்டும்.
🏕️ இன்றைய தற்சோதனை
🏕️ சிந்தித்து உணரும் ஆறாவது அறிவின் சிறப்பினை மனிதர்கள் முழுமையாக பயன்படுத்தி அதனுடைய, அனைத்து சிறப்புகளையும் உள்ளுணர்வாக உணர்ந்து கொள்ள வேண்டும். தற்சோதனை தன்னை தானே உணர்த்த வல்லது. அறிவை முழுமையாக உணர்ந்து கொள்ளக்கூடிய சிறப்பு உடையது.
🏕️ இன்றைய பண்புப்பயிற்சி
🏕️ எல்லாவற்றிலும் அறிவு இருக்கிறது, ஆனால் அந்த அறிவு முழுமையாக இயக்கத்தில் செயல்பாட்டில் இருக்கிறதா..? என்றால் அது இல்லை. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் மட்டும் தான் அறிவு முழுமையாக பயன்பாட்டுக்கு வரும். எல்லா சூழ்நிலையிலும், எல்லா நிலையிலும், அறிவை விட்டு விலகாது வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...
🏕️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🏕️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment