வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 15
🌼☘️🌼☘️🌼☘️🌼☘️🌼☘️🌼
⛳ இன்றைய நித்தியக்கடன்
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ இன்றைய சாதகம்
⛳ சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.
⛳ இன்றைய நற்சிந்தனை
⛳ உடலுக்குள் இருக்கக்கூடிய ஏழு ஆதாரங்களில், எதன் மீது நினைவை செலுத்தி தவம் செய்தாலும், அதனுடைய மையத்தில் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு ஆக்கினையில் தவம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், இரண்டு புருவங்களுக்கு மத்தியில் புறத்தில் ஆக்கினையை கவனிக்காமல் பிட்யூட்டரி க்லான்டின் மையப் பகுதிக்குள் சென்று அங்கே தவம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
⛳ இன்றைய தற்சோதனை
⛳ அந்த அனுபவம் மிகவும் சிறப்பானதாகும். ஆன்மீக மேம்பாடு நிறைந்ததாகவும், நுண்மாண் நுழைபுலன், பெருந்தகைமை, இணக்கத்தன்மை, ஏற்புத்திறன், படைப்புத்திறன் என இவை ஐந்தும் சிறப்பாக உங்களுக்குள் அனுபவமாகும். பிரம்மஞான பாடலில் மகரிஷி கூறிய வார்த்தைகள் அனைத்தும் அனுபவமாக உணர்வீர்கள். செயல்விளைவு நீதியின் அடிப்படையில் ஞானத்திற்கு உகந்த செயலை செய்தால் ஞானம் கட்டாயம் விளைவாக வரும்.
⛳ இன்றைய பண்புப்பயிற்சி
⛳ நல்லதொரு பண்புநெறி, இதுவே மனிதனின் அடையாளம். இந்த அடையாளத்தை மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த அடையாளத்தை தேடிய ஒரு பயணம் தான், உள்ளுணர்வு பயணம் ஆன்மீக பயணம். இந்த பயணத்திற்கு பேருதவியாக குண்டலினியோகத்தை வேதாத்திரிமகரிஷி அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். முறையாக மனவளக்கலை பயிற்சிகளை நாள் தவறாமல் செய்து வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுவோமாக. வாழ்க வளமுடன்...
⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment