நித்தியக்கடன் ஜூன் 11 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 11


🥭♻️🥭♻️🥭♻️🥭♻️🥭♻️🥭


🪴 இன்றைய நித்தியக்கடன்


🪴 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🪴 இன்றைய சாதகம்


🪴 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


🪴 இன்றைய நற்சிந்தனை

  

🪴 உடலில் ஏற்படக்கூடிய இரசாயன நிலை மாற்றத்திற்கு ஏற்ப எண்ணங்களும் செயல்படும் விதமும் மாறுபடுகிறது. இந்த ரசாயன மாற்றம் உட்கொள்ளும் உணவினாலும் அந்த உணவில் உள்ள பொருளின் தன்மையை பொறுத்தே அமைகிறது. உணவுகள், உட்கொள்ளும் மருந்துகள், போதை வஸ்துக்கள் இதன் வழியாக ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மனதையும், உடல் செல்களையும் குழப்பமடைய செய்யும்.


🪴 இன்றைய தற்சோதனை


🪴 மனிதர்களுடைய கருமைய தன்மைக்கு இன்ன,இன்ன ரசாயன அமைப்புதான் ஏற்புடையது என்று இருக்கிறது. இதை மீறும் போதும் இது மாறும் போதும், உடலிலும், மனதிலும், பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொருத்தமான உணவுகளை உட்கொள்வதே சிறப்பு. சைவஉணவுகள், பச்சை காய்கறிகள், பழங்கள், நோய்நிலை தன்மைக்கேற்ப மருந்துகள்.


🪴 இன்றைய பண்புப்பயிற்சி


🪴 இந்த ரசாயன இயக்கம் அமைப்பை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். அறிவு நிலையின் எல்லாவகையிலும் மனிதர்கள் உயரவேண்டும். சீரான ரசாயன இயக்கம் அமைப்பை எப்போதும் வைத்துக்கொள்ளும் போது மனிதர்கள் அறிவு நிலையில் உயர முடியும். இந்த சீரான இரசாயன அமைப்பை அமைத்துக் கொள்வது முறையான பயிற்சியால் மட்டும் தான் முடியும். வேதாத்திரிய பயிற்சி உடலை சீரான ரசாயன அமைப்பில் எல்லா நாளும் பாதுகாக்கிறது. நாள் தவறாமல் பயிற்சி செய்யும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...


🪴 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🪴 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments