வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 11
🔥🚥🔥🚥🔥🚥🔥🚥🔥🚥🔥
🔰 இன்றைய நித்தியக்கடன்
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 இன்றைய சாதகம்
🔰 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🔰 இன்றைய நற்சிந்தனை
🔰 தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவைகள் வழியாக பலவகையான அனுபவத்தை பெறுகின்றோம். இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே நம்முடைய தேவைகள் பழக்க வழக்கங்கள் அனைத்தும் அமைந்துவிடுகிறது. புலன்களை தாண்டி புலன்களுக்கு அப்பால் புலன்களை கடந்து அப்புறத்தில் வாழும்போது அந்த வாழ்க்கை நிறைவாகவும், சலிப்பற்ற தாகவும், சோர்வற்றதாகவும், பூரணமாகவும் அமையும்.
🔰 இன்றைய தற்சோதனை
🔰 ஸ்பரிசத்தை தோலை கடந்து மனதின் வழியாக உணர முயற்சிக்கலாம், சுவையை நாக்கை கடந்து மனதின் வழியாக சுவைக்க முயற்சிக்கலாம், வாசனையை மூக்கை கடந்து மனதின் மூலமாக நுகர முயற்சி செய்யலாம், கண்களை கடந்து மனதின் வழியாக பார்க்க முயற்சி செய்யலாம், காதுகளை கடந்து ஓசையை மனதின் மூலமாக கேட்க முயற்சி செய்யலாம். இவ்வாறாக நம்முடைய செயல்கள் புலன்களைக் கடந்து அமைத்துக் கொள்ளும்போது மனதினுடைய மறுமுனைக்கு நாம் பயணப்படுகிறோம்.
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 பழக்கத்தை வைத்துக் கொண்டு இந்த பயணத்தை மேற்கொள்வது என்பது சற்று கடினமான காரியம். பலவகைகளில் இருக்கக்கூடிய பழக்க நிலையிலிருந்து விளக்கத்தின் வழியே உங்களை மாற்றிக் கொண்டு, உயர்ந்த பண்புகளோடு வாழக்கூடிய சிறந்த பண்பாடோடு நம்மை எப்போதும் நாம் வழிநடத்த வேண்டும். நம்மை நாம் தான் வழிநடத்த வேண்டும். மாறாக நம்முடைய பழக்கம் வழி நடத்த கூடாது. நம்மை நாம் வழிநடத்தும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment