வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 10
❄️🪷❄️🪷❄️🪷❄️🪷❄️🪷❄️
🪻 இன்றைய நித்தியக்கடன்
🪻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🪻 இன்றைய சாதகம்
🪻 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🪻 இன்றைய நற்சிந்தனை
🪻 அங்குலம் அங்குலமாக தானும் தன்னை சார்ந்தவைகளையும், ஒவ்வொரு கணமும் உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, இந்த பூமி! இயற்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த இயற்கையின் ஒரு பகுதி மனித இனம் என்பதை தெள்ளத் தெளிவாக, ஆராய்ந்து சிந்தித்து அதனை விஞ்ஞான விளக்கத்தோடு இதனை அனைவரும் உணர வேண்டும்.
🪻 இன்றைய தற்சோதனை
🪻 இயற்கை என்ற பேறாற்றலில் நாம் ஒரு சிறிய துகள் கூட இல்லை, என்பதை உணர்ந்து கொண்டால்தான் இந்த இயற்கை நமக்கு எவ்வளவு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறது என்று புரியும், நமக்கே தெரியாமல் நம்மை பேணி வளர்த்து பாதுகாத்து, எல்லா வகையிலும் உதவியாகவும், உள்ளமைப்பு தன்மையாகவும் இருப்பதெல்லாம் இயற்கையே.
🪻 இன்றைய பண்புப்பயிற்சி
🪻 இவ்வாறான இயற்கைக்கு இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இயற்கையில் ஒன்றான நாம் இந்த இயற்கைக்கு எதிர் வினை செய்து கொண்டிருக்கிறோம். இவைகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு, பலதரப்பட்ட நிலையில் இருக்கும் இயற்கை நாம் தான் என்பதை உணர்ந்து நமக்கு நாமே தீமை செய்து கொள்ளும் இந்த கொடுமையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🪻 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🪻 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment