நித்தியக்கடன் மே 09 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 09


⭕🔶⭕🔶⭕🔶⭕🔶⭕🔶⭕


🌸 இன்றைய நித்தியக்கடன்


🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌸 இன்றைய சாதகம்


🌸 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🌸 இன்றைய நற்சிந்தனை

  

🌸 உங்களுடைய சிந்தனை தான் உங்களை உருவாக்குகிறது. உங்களுடைய மனோசக்தி உங்கள் வாழ்க்கையின் மதிப்பை உயர்த்துகிறது. ஈடு இணை இல்லாத ஆற்றலாக இயங்கும் மனோசக்தி. இந்த மனோசக்தியை விருத்தி செய்துகொள்ள வேண்டும். இதனுடைய விசேஷமான சிறப்பு தன்மையில் மனிதர்கள் உயர்வு பெற வேண்டும். "உன் எண்ணமே உன் வாழ்க்கையை செதுக்கும் சிற்பி"


🌸 இன்றைய தற்சோதனை


🌸 புத்தம்புது தேகம், புத்தம்புது அனு இயக்க தன்மைகள். நம் உடலுக்குள் அனுக்கள் புதிதாக வந்து கொண்டே இருக்கிறது. பழைய இறந்து போனால் அனுக்கள் உடலைவிட்டு ஒரு பக்கம் சென்று கொண்டே இருக்கிறது. நாம் நேரத்திற்குக் நேரம் புதிதாக உருவெடுக்கிறோம். இந்த கோட்பாட்டை விஞ்ஞானத்தை ஆழ்மனதுக்கு அப்பால் சென்று தற்சோதனை செய்து வாழ்வை உங்களுடைய தாக்கிக்கொண்டு வாழ்வீர்களாக.


🌸 இன்றைய பண்புப்பயிற்சி


🌸 இயற்கையெனும் பேரியக்க ஆற்றலை மதித்து மனிதர்கள் எப்போது வாழ்கிறார்களோ, அப்போது அவர்கள் வாழ்க்கையில் துன்பம் தொலைகிறது, நோய்களின் தன்மைகள் தொலைகிறது. இந்த நிகழ்ச்சியை இயற்கையை மதிக்கும் போது மனிதர்களுக்குள் நடத்திக் கொள்கிறார்கள். இது ஒன்றும் அதிசயம் கிடையாது, இயற்கையின் ஒரு சிறிய இயக்க நிகழ்ச்சி இயற்கையை மதிக்கும் பண்பினால் உயரும் போது, இந்த இயற்கை நிகழ்வு இயல்பாகவே நடக்கிறது. வாழ்க வளமுடன்...


🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments