வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 08
♾️🪴♾️🪴♾️🪴♾️🪴♾️🪴♾️
🎉 இன்றைய நித்தியக்கடன்
🎉 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎉 இன்றைய சாதகம்
🎉 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🎉 இன்றைய நற்சிந்தனை
🎉 நம்முடைய முகத்தை நாம் பார்க்க வேண்டும் என்றால், ஒரு கண்ணாடியின் முன் சென்று நிற்க வேண்டும். அப்போது தான் நம் முகத்தை பார்க்க முடியும். இதுபோலவே நம் மனதை நாம் பார்க்க வேண்டுமானால், அறிவை கூர்மைப்படுத்த வேண்டும். கூர்மையான அறிவின் முனையில் நின்றுதான் மனதை இன்னதென்று அடையாளம் கண்டு கொள்ள முடியும். அப்படி மனதை அடையாளம் கண்டு கொண்டபின் அதற்கே அதனை அறிமுகம் செய்யலாம்.
🎉 இன்றைய தற்சோதனை
🎉 மனதிலிருந்து விலகி அறிவாக நின்ற நிலையில் தான் மனமென்றால் என்னவென்று விளங்கும். நாம் முழுமையான அறிவு நிலையில் வாழ்வதற்காகவே, நாம் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவே, நமக்கு அன்போடு வேதாத்திரி மகரிஷி அவர்களால் மனவளக்கலை அருளப்பட்டிருக்கிறது. இப்பயிற்சிகளை அளவு முறையோடு பிழையில்லாமல் செய்து பழகப்பழக எல்லா வகையிலும் நம்மை தற்சோதனையில் ஆட்படுத்திக் கொள்ளும் போது, மனம் அறிவு என்ற நிலைக்கு உயர்கிறது.
🎉 இன்றைய பண்புப்பயிற்சி
🎉 மனதை அறிவோடு இணைத்து பழகப்பழக மனதிலிருந்து, மனம் விலகி அறிவு என்ற முழுமையான நிலையாக உயர்வு பெறும். இத்தகைய நிலைக்கு நாம் நகர வேண்டுமானால், நாம் சில பண்புகளை அடிப்படையாக கொண்டு வாழ வேண்டும். அவை முறையாக தற்சோதனை, திட்டமிடல், அயரா விழிப்பு நிலை இந்தப் பண்பில் நாம் உயர்வு பெற பெற மனம் அறிவாகும் அறிவே தெய்வமாகும். வாழ்க வளமுடன்...
🎉 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎉 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment