நித்தியக்கடன் ஜூன் 07 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 07


🛟🕳️🛟🕳️🛟🕳️🛟🕳️🛟🕳️🛟


❄️ இன்றைய நித்தியக்கடன்


❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


❄️ இன்றைய சாதகம்


❄️ வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


❄️ இன்றைய நற்சிந்தனை

  

❄️ அமைதியான ரத்த ஓட்டம், அமைதியான வெப்ப ஓட்டம், அமைதியான காற்றோட்டம், அமைதியான உயிரோட்டம், அமைதியான காந்த ஓட்டம், அமைதியான உடலியக்கம் இவ்வாறாக உடலும் உடல் சார்ந்த அனைத்து உறுப்புகளும்,  அமைதியாக இயங்கும்போது மட்டும்தான் மனம் அமைதி நிலைக்கு தன்மாற்றம் பெறும். உடல் வேகமாக செயல்படும்போது மனமும் அதற்கு ஏற்றார்போல வேகமாக இயங்கும். உடலை அமைதிப்படுத்தவே நிதானமான உடற்பயிற்சி, நிதானமான காயகல்பம், நிதானமான தவம் அனைத்தும் அமைத்துக் கொள்ளுமாறு அன்போடு கூறப்படுகிறது.


❄️ இன்றைய தற்சோதனை


❄️ நிதானமான அசைவுகளுக்கு இடையே மனம் அமைதியாக இயங்கும். இவ்வாறாக மனம் பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா என்று நம்முடைய முயற்சிக்கும் பயிற்சிக்கும் தக்கவாறு மனதினுடைய, கடைக்கோடி நிலைக்கு பயணம் செய்யும். மனதை இந்த கடைக்கோடி பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்ததாகும். இந்த செயலில் வெற்றி காண்பதற்காகவே இந்த மனித உருவத்திற்கு இறைநிலையே தன்மாற்றம் கொண்டது.


❄️ இன்றைய பண்புப்பயிற்சி


❄️ தன்னைத்தானே கண்காணித்துக் கொண்டு, ஒவ்வொரு இயக்கங்களுக்கு இடையே இருக்கும் ஓய்வுநிலையை ஆராய்ச்சி செய்து, நாள் தவறாது இந்த பயிற்சி முறையில் தன்னை விருப்பத்தோடு இணைத்துக்கொண்டு, எவரெல்லாம் முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு இறை உணர்வு சாத்தியம்.  தன்னை தானே கண்காணித்து உள்ளுணர்வை உயர்த்திக் கொள்வோம். இப்பண்பில் ஒவ்வொரு கணமும் உயர்வோம்‌. வாழ்க வளமுடன்...


❄️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


❄️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments