நித்தியக்கடன் ஜூன் 04 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 04


⭕🎲⭕🎲⭕🎲⭕🎲⭕🎲⭕


🌌 இன்றைய நித்தியக்கடன்


🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌌 இன்றைய சாதகம்


🌌 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


🌌 இன்றைய நற்சிந்தனை

  

🌌 எந்த ஒரு பருப்பொருள் ஆனாலும் அணு சிதைவு அணுச் சேர்க்கை என்ற நீதிக்கு ஏற்ப, அதனுள் இருக்கும் மூலக அணுக்கள் குறிப்பிட்ட காலம் வரை, இந்த அணு சேர்க்கையையும் அணு சிதைவையும் சமாளிக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஆனால் இந்த அணு  சேர்க்கையையும் அணு  சிதைவையும் சமாளிக்க முடிவதில்லை. இது எல்லாவிதமான அணு கூட்டு அமைப்புக்கும் பொருந்தக்கூடிய நீதியாகும். இதைத்தான் அணு வளர்ச்சி, தளர்ச்சி, முதிர்ச்சி என்று மூன்றுவித கோட்பாடாக விஞ்ஞானத்தில் பேசப்படுகிறது.


🌌 இன்றைய தற்சோதனை


🌌 இதே கோட்பாடு நமக்கும் உண்டு. குறிப்பிட்ட காலம் வரை நாம் எல்லாவகையிலும் ஆக்கத்தோடும் ஊக்கத்தோடும் இருக்கின்றோம். குறிப்பிட்ட வயதுக்கு பின்னால் தளர்ச்சியை சந்திக்கிறோம். முடிவில் முதிர்ச்சி அடைந்து மிகவும் பலவீனமான நிலைக்கு சென்று விடுகிறோம். இந்த இயற்கையினுடைய நீதியை இந்த காலகட்டத்தில் சொற்ப காலமே ஒவ்வொரு மனிதனும் சமாளிக்க முடிகிறது. குறுகிய காலத்திலேயே இந்த மூன்று விதமான கோட்பாடுகளும் நடந்து முடிந்துவிடுகிறது.


🌌 இன்றைய பண்புப்பயிற்சி


🌌 யாரெல்லாம் தன்னை யோக பயிற்சியோடு இணைத்து கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இந்த அணு வளர்ச்சி, தளர்ச்சி, முதிர்ச்சி என்ற இயற்கை நீதியை சமாளித்து, ஒவ்வொரு உயிர் துகள்களின் ஆற்றலையும் இயக்கத்தையும் துரிதப்படுத்தி கொண்டு, சுலபமாக பெரிய விபத்துக்கள் ஏதுமில்லாமல் இவைகளை கடக்க முடிகிறது. ஆதலால் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை நாள் தவறாமல் செய்யும் நற்பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...


🌌 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌌 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments