நித்தியக்கடன் ஜூன் 03 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 03


🧊🪴🧊🪴🧊🪴🧊🪴🧊🪴🧊


🏵️ இன்றைய நித்தியக்கடன்


🏵️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🏵️ இன்றைய சாதகம்


🏵️ திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🏵️ இன்றைய நற்சிந்தனை

  

🏵️ "வலிமை உடையது வலிமையற்றதை வழி நடத்தும்"அணு முதல் அண்டம் வரை இந்த இறைநீதி சரிநிகர் சமானமாக இயங்கும். பேரண்டம் முழுவதிலும் அது அதன் சிறப்பிற்கும், இயக்கத்திற்கு ஏற்ப இந்நீதி வளர்ச்சி, தளர்ச்சி, முதிர்ச்சி என்ற விகிதாச்சாரத்தில் இயங்கும். உயிர் வகைகளில் பிரித்து உணர்தல், தரமுயர்த்தல், திறன் வளர்த்தல் என்ற இந்த கோட்பாடே, மேலும் விரிவடைந்து சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் என்ற மேலான உணர்வு முறையாக தன்னை வெளிப்படுத்துக் கொள்கிறது.


🏵️ இன்றைய தற்சோதனை


🏵️ பழையன கழிதலும், புதியன புகுதலும் இறைநீதியின் மிக முக்கியமான கோட்பாடுமாகும். தேவையற்ற பழையன நம்மிடமிருந்து கழியும் போது, அவைகளை அமைதியாக வாழ்த்தி வழியனுப்பி வைப்போம். நீண்ட நெடிய வித்து தொடராக வந்து அமைந்துள்ள மனித கருமையத்தில், தேவையற்ற பழக்க வழக்கங்கள் பழையன இருக்கின்றன. அவைகளை தற்சோதனை வழியாக அடையாளம் கண்டு, கொஞ்சம் கொஞ்சமாக வழியனுப்பி வைப்போம்.


🏵️ இன்றைய பண்புப்பயிற்சி


🏵️ தன்னை தானே புனிதப் படுத்திக் கொள்ளுதல், தன்னிடத்தில் உள்ளடக்கமாக அமைந்துள்ள புனிதத்தை பெருக்கிக் கொள்ளுதல். இதுவே ஞான யோகம் ஆகும். இந்த ஞானயோகத்தில் உயர்வு பெறுவதற்கு நாள் தவறாமல் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ளும் பண்பில் உயர்வோமாக. வாழ்க வளமுடன்...


🏵️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🏵️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments