வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 31
🕸️🌀🕸️🌀🕸️🌀🕸️🌀🕸️🌀🕸️
🔥 இன்றைய நித்தியக்கடன்
🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔥 இன்றைய சாதகம்
🔥 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🔥 இன்றைய நற்சிந்தனை
🔥 "என்னிலேஇருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்த கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லீரேல்
என்னிலே இருந்துணர்ந்துயான் உணர்ந்து கொண்டனே"
. -சிவவாக்கியம்
🔥 என்னை நான் உணர்ந்து கொள்வதற்காகவும் அறிந்து கொள்வதற்காகவும் எனக்கு இந்த தீட்சை வழங்கப்பட்டிருக்கிறது என்று எண்ணி "உலக சமுதாய சேவா சங்கத்தில்" உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அதற்கான முழு தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
🔥 இன்றைய தற்சோதனை
🔥 என் உயிருக்கும், மனதிற்கும், உடலுக்கும், எனக்கும் இல்லாத நட்பு, எனக்கு என் மீது இல்லாத நம்பிக்கை, என் வாழ்க்கையில் எனக்கு இல்லாத அக்கறை, என்னோடு பழகுபவர்கள் எவருக்கும் என்மீது ஏற்படாது. நான் என்னை எவ்வாறு புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறே என்னை மற்றவர்கள் நடத்துவார்கள். இது தான் இயற்கையின் நீதி.
🔥 இன்றைய பண்புப்பயிற்சி
🔥 என்னுடைய மனசாட்சி என்னை மதிக்கும்படி வாழ்வதுவே ஞான வாழ்வாகும். என்னை எனக்குள் நான் எவ்வாறு நிலை நிறுத்திக் கொள்கிறேனோ அதுவே நான் ஆகும். அதனுடைய ஆழம், அகலம், நீளம் இவற்றையெல்லாம் மயக்கப்பிழையில்லாமல் புரிந்துகொண்டு கண்டறிந்த பிழைகளை அகற்றி வாழ்வதே மனித பண்பாகும். தான் துன்பப்படாமலும் பிறரை துன்பப்படுத்தாமலும் இறை ஞானத்தோடு வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🔥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment