நித்தியக்கடன் மார்ச் 26 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 26


🌸🕸️🌸🕸️🌸🕸️🌸🕸️🌸🕸️🌸


💦 இன்றைய நித்தியக்கடன்


💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💦 இன்றைய சாதகம்


💦 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


💦 இன்றைய நற்சிந்தனை


💦 "அதிகம் உண்பவர் அல்லது உண்ணாமையை இருப்பவர், அதிகம் உறங்குபவர் அல்லது உறங்காமல் இருப்பவர்கள்" இவர்களுக்கெல்லாம் இந்த "குண்டலினி யோகம்" சாத்தியம் கிடையாது. குண்டலினி யோகம் எனும் இந்த "ராஜயோகம்" சில பல தியாகங்களுக்கு பின்னால்தான் தன்னை அவரவருக்குள் வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையதாகும்.


💦 இன்றைய தற்சோதனை


💦 விட்டுக்கொடுத்தல், தியாகம், சகிப்புத்தன்மை இவைகளாய் நின்று வாழ்ந்து எந்த ஒரு சூழ்நிலையோடும், எந்த ஒரு நபரோடும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் பழகிஉயிராலும், மனதாலும் ஓங்கி உயர்ந்து. இவ்வாறாக உங்களை நீங்கள் ஒழுங்கு படுத்திக் கொள்ளும் போது "குண்டலினி யோகம்" உங்களுக்குள் முழுமை பெரும் "வேதாத்திரி மகரிஷி" கொடுத்த தற்சோதனையை முழுமையாக பயன்படுத்தி பயன் காண்பீர்களாக.


💦 இன்றைய பண்புப்பயிற்சி


💦 இது ஒரு துள்ளியமான கணிதம் அளவும், முறையும். எல்லாவற்றிலும் இந்த அளவும், முறையும் இருக்கிறது, இந்த அளவு முறை இல்லாத எந்த ஒரு தன்மாற்றமும் இந்த பிரபஞ்சத்தில் கிடையவே கிடையாது, எல்லா இயக்கங்களும் அளவோடும், முறையோடும் சீராக இயங்குகிறது, இது இறைநீதி இதை உள்ளுணர்ந்து, ஏற்று வாழும் பண்பு மனித பண்பாகும், வேதாத்திரி மகரிஷி கொடுத்த "ஐந்தில் அளவு முறை" இதனை மீறும் போதும், மாறும் போதும் மனிதன் மிருகமாகிறான். நல்ல மாற்றங்களை உருவாக்குவோம் நலமுடன் உயர்வோம். வாழ்க வளமுடன்...


💦 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💦 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments