நித்தியக்கடன் மார்ச் 24 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 24


🌌🌼🌌🌼🌌🌼🌌🌼🌌🌼🌌


☣️ இன்றைய நித்தியக்கடன்


☣️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


☣️ இன்றைய சாதகம்


☣️ ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


☣️ இன்றைய நற்சிந்தனை


☣️ மனிதனாக பிறந்திருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு கடமை இருக்கிறது. இந்த கடமையினை எவர் ஒருவர் சரியாக சிந்தித்து உணர்ந்து செயல் புரிகிறாரோ, அவருக்கு உடலாலும், மனதாலும், உயிராலும் வாழ்க்கையில் எந்தவிதமான துன்பமும் இல்லாமல், இனிமையான ஒரு சூழ்நிலையோடு வாழ்க்கை பயணமானது இனிதே நடைபெறும். தனக்கு துன்பம் செய்து கொள்ளாத ஒரு தெளிவோடு, தனது செயல்களை ஒழுங்கமைத்து கொள்ளக்கூடிய ஒரு வாழ்க்கை முறையாகும்.


☣️ இன்றைய தற்சோதனை


☣️ அவரவர்களுடைய உடலிலும், மனதிலும், வாழ்க்கை சூழ்நிலைகளிலும் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அவரவர்களுக்கு நிச்சயமாக விளக்கம் தெரிந்திருக்க வேண்டும். இந்த தெளிவு இல்லாமல் வாழ்க்கையை நிறைவாக வாழ முடியாது. தனக்கு நடைபெறக்கூடிய எந்த ஒன்றுக்கும் விளக்கம் தெரிந்து கொண்டு, அதன் பின் தொடர்ந்து செயல்களை செய்வது மனித வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகும்.


☣️ இன்றைய பண்புப்பயிற்சி


☣️ தன்னுடைய உடலில் நடைபெறக்கூடிய உடல் விஞ்ஞானத்தையும் உடல் ஞானத்தையும் உணர்ந்து கொண்டு நம்முடைய எண்ணம், சொல், செயல் இந்த மூன்றையும் ஒழுங்கு செய்து கொள்ளும்போது தன்னளவில் தனக்குள் உள்ள, இறைநிலையை உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. இதன் தொடர்ச்சியாக தன்நிறைவோடும், சுயகட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் வாழும் பண்பு மேலோங்கும். இதுவே இறைநிலையை உணர்வதற்கான அடிப்படை தகுதியாகும். வாழ்க வளமுடன்...


☣️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


☣️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments