நித்தியக்கடன் ஏப்ரல் 18 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 18


🌌🍁🌌🍁🌌🍁🌌🍁🌌🍁🌌


💐 இன்றைய நித்தியக்கடன்


💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💐 இன்றைய சாதகம்


💐 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


💐 இன்றைய நற்சிந்தனை


💐 ஏதோ ஒரு தேவை, ஏதோ ஒரு நினைவு, ஒரு சூழ்நிலையில் இருந்து மற்றொரு சூழ்நிலைக்கு உங்களை உந்தித் தள்ளுகிறது. இது எல்லாவிதமான வாழ்க்கை சூழ்நிலைக்கும் பொதுவாக அமைய கூடியதே. விளைவு நன்மையாக அமையும் போது இது வாழ்க்கையின் வெற்றியாக மாறுகிறது. அதுவே தேவையில்லாத துன்பமாக விளைவு அமைந்துவிட்டால் வாழ்க்கை எதிர் திசையில் பயணம் செய்கிறது.


💐 இன்றைய தற்சோதனை


💐 நீங்கள் நாள் தவறாமல் செய்யக்கூடிய பயிற்சி முறை, இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து உங்களை பாதுகாக்க வல்லது. நாளைக்கு மறுநாளோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலேயோ  இந்த மாற்றம் என்பது அமைந்துவிடாது. உங்களுடைய தன்னார்வம், பயிற்சியை செய்யும் முறை, பயிற்சியின் பலனாக நீங்கள் மாறிய விதம் இவை அனைத்தையும் பொருத்தே அமையும்.


💐 இன்றைய பண்புப்பயிற்சி


💐 எப்போதும் எங்கேயும் நன்மை தரத்தக்க சிந்தனைகளையும், செயல்பாடுகளையும்,   வாழ்க்கையாகக் கொண்டு ஒவ்வொரு கட்டத்தையும் நகர்த்தி கொள்ளுங்கள். இன்பமும் துன்பமும் நம்முடைய கர்மவினை அமைப்புக்கு ஏற்பவே உருவாகிறது. கர்மவினை தன்மையை முறையான பயிற்சி செய்து பண்போடு வாழும்போது நிச்சயமாக மாற்றம் பெறும். வாழ்க வளமுடன்...


💐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments