நித்தியக்கடன் ஏப்ரல் 11 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 11


🕸️🔘🕸️🔘🕸️🔘🕸️🔘🕸️🔘🕸️


♻️ இன்றைய நித்தியக்கடன்


♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♻️ இன்றைய சாதகம்


♻️ வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


♻️ இன்றைய நற்சிந்தனை


♻️ நாம் முறையாக பயிற்சிகளை செய்து கொண்டே இருக்கும் போது, ஏதோ ஒரு நாள் ஒரு சமயம் நமக்கு மின்னலென பளிச்சென்று ஒரு சிந்தனை உருவாகும். இந்த சிந்தனையோடு நம்மை நாம் சரியாக பொருத்தி கொண்டோமேயானால், அதன் விளைவாக நம்மைப் பற்றிய உண்மைகள் இந்த பஞ்ச பூதங்களை பற்றிய உண்மைகள் பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைகள், என படிப்படியாக நமக்கு ஏராளமான விளக்கங்கள் கிடைக்கும்.


♻️*இன்றைய தற்சோதனை*


♻️ இந்த விளக்கங்களை முழுமையாக தற்சோதனை செய்து அவைகளுக்கு தகுந்தவாறு நம்மை உயர்த்திக் கொள்ளும் போது நம்முடைய கருமையம் தூய்மை பெறும். இந்த தூய்மையானது கருமையத்தில் அதிகமாக அதிகமாக, நாம் இன்னும் பல படிநிலைகளில் உயர்வு பெறுவோம். பிரபஞ்சத்தில் என்னவெல்லாம் நடைபெறுகிறதோ, அவை அனைத்தும் நமக்குளாகவும் நடைபெறுகிறது என்ற உண்மை விளங்கிவிடும். பிரபஞ்சத்திற்கும் நம் உடலுக்கும் நெருக்கமான இயக்கங்கள் நடந்து கொண்டிருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்வுவோம்.


♻️ இன்றைய பண்புப்பயிற்சி


♻️ தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பவிளைவு இல்லாமல் தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவைகளை யாரெல்லாம் சீராக முறையாக கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு பிரம்மஞானம் தெள்ளத் தெளிவாக விளங்கிவிடும். உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் இவற்றில் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வளமோடும் நலமோடும் வாழ்வீர்களாக. வாழ்க வளமுடன்...


♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments