வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 10
☣️💦☣️💦☣️💦☣️💦☣️💦☣️
🔥 இன்றைய நித்தியக்கடன்
🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔥 இன்றைய சாதகம்
🔥 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔥 இன்றைய நற்சிந்தனை
🔥 98.6 parent hit வெப்பத்தை இந்த உடல் சீராக வைத்திருக்கிறது. இதேபோல 700 சிவப்பு அணுக்களுக்கு ஒரு வெள்ளை அணு என்ற சதவீதத்தின் அடிப்படையிலும் இந்த உடல் இயக்க அமைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல கோட்பாடுகள் உடலில் உள்ளன. இந்த விகிதாச்சாரம் மாறும் போது உடலில் நோய் ஏற்படுகிறது. இது சீராக ஒரே நிலையில் இருக்கும் போது நோய் கிடையாது. இதனையெல்லாம் சீராக நடத்திக் கொண்டிருப்பது யார்...?
🔥இன்றைய தற்சோதனை
🔥 இறைவன் இயற்கை என்ற பேராற்றலாகவும், நம் உடலாகவும், உயிராகவும், மனமாகவும், அறிவாகவும் இருக்கின்றான். இந்த நான்கை பற்றிய உண்மைகளை ரகசியங்களை நாம் தெரிந்துகொண்டு அனுபவமாக்கிக் கொள்ளும் போதுதான், நம் என்ன செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற தெளிவு உண்டாகும். இறைவனுக்கு ஒத்தும் உதவியுமாக நாம் நம் எண்ணம், சொல், செயல்களை அமைத்து கொண்டால் போதும் அந்த இடத்திலிருந்து மனித வாழ்க்கை நிறைவானதாக அமைகிறது.
🔥 இன்றைய பண்புப்பயிற்சி
🔥 மேலே சொல்லப்பட்ட நான்கு விஷயங்களை என்ன என்று தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் இறைவனுக்கு ஒத்தும் உதவியுமாக நம்மால் வாழமுடியாது. ஆகவே அவைகளைப் பற்றிய தெளிவான விளக்கத்தை தெரிந்துகொண்டு, தெளிந்த நிலையோடு தானும் துன்பப்படாமல், பிறரையும் துன்பப் படுத்தாமல், வாழும் இறை பண்போடு நாமும் நம் குடும்பமும் நலமும் வளமும் பெறுவோம். வாழ்க வளமுடன்...
🔥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment