நித்தியக்கடன் பிப்ரவரி 26 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 26


💠🕳️💠🕳️💠🕳️💠🕳️💠🕳️💠


🔶 இன்றைய நித்தியக்கடன்


🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔶 இன்றைய சாதகம்


🔶 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🔶 இன்றைய நற்சிந்தனை


🔶 புதிதாக நாமொரு பாதையில் செல்லும்போது அதற்கான தூரமும், காலமும் மிகவும் அதிகமாக இருப்பது போல் தோன்றும். அந்த பாதையில் பலமறை சென்று வந்து பழகிவிட்டால் பெரிதாக காலத்தையும், தூரத்தையும் உணர்த்துவது இல்லை. எந்த ஒன்றுமே புதிதாக இருக்கும்போது நம்முடைய நேரத்தையும், நம்முடைய கவனத்தையும் அதிகமாக தன் வசப்படுத்திக் கொள்கிறது. நம் வாழ்க்கையும் அப்படித்தான் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் புத்தம் புதிது.


🔶 இன்றைய தற்சோதனை


🔶 இதன் அடிப்படையில் நாம் சிந்திக்கும்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் புதிது புதிதாக வாழ்க்கையில் கற்றுக் கொண்டே இருக்கிறோம். இந்த கற்றுக்கொள்ளுதல் எங்கேயாவது நிற்குமா என்றால் நிற்கப் போவது இல்லை. மரணத்தின் கடைசி நொடி வரை நாம் கற்றுக் கொண்டே தான் இருக்கப் போகிறோம். ஆக நாம் மிகுந்த கவனத்தோடு நம்முடைய வாழ்க்கையை வாழ வேண்டும். தற்சோதனை இவை அனைத்தையும் நமக்கு தெளிவு படுத்த கூடிய சிறப்பான பயிற்சி முறை.


🔶 இன்றைய பண்புப்பயிற்சி


🔶 உளஆர்வம் என்பது மனித  கருமையத்திற்கும், வாழ்க்கைக்கும் மிகவும் பொருத்தமானது. இந்த பண்பு நம்முடைய அறிவை சிறப்பாக உயர்த்தக்கூடிய நிலையை கொடுக்கிறது. இந்த உள ஆர்வம்தான் ஆன்மீகத்தில் ஒவ்வொரு படியாக நம்மை நகர்த்துகிறது. அறிவை, மனதை, உயிரை புத்தம் புதிதாக புதிப்பிக்கிறது. உண்மையான நம்முடைய தேடல்கள் உயர்ந்த ஆன்மீக தளத்தில் நம்மை நிலை நிறுத்தும் வாழ்க வளமுடன்...


🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments