வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 25
🍥🎲🍥🎲🍥🎲🍥🎲🍥🎲🍥
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் இவைகள் அனைத்தும் வேறுவேறு தன்மைகளை உடையது. இருந்தபோதும் இவைகள் ஒன்றை ஒன்று இனக்கத் தன்மையோடு ஒருங்கிணைத்து இயங்குகிறது. இவைகளுக்கு இடையே இருக்கக்கூடிய பண்பை சிந்தனை செய்து பாருங்கள் அளவோடும், முறையோடும் இவைகளோடு நாம் தொடர்பு கொள்ளும் போது, இவைகள் நமக்கு நன்மையே செய்கின்றன. அளவுமுறை மாறும்போதெல்லாம் இவைகள் நம் வாழ்க்கையில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
♻️ இன்றைய தற்சோதனை
♻️ ஒன்றை ஒன்று அழித்துவிடாமல் சிறப்பாக முறையோடு இணைந்து இயங்குகிறது. இந்த பண்புதான் இங்கு உயிர்கள் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது. இந்த ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்புமே இவைகளுடைய சிறப்பான பண்பாகும். இந்த சிறப்பினை ஆழமாக தற்சோதனை செய்தால்தான் அதனை உணர்ந்து கொள்ள முடியும்.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ கற்பனை நம்மை உண்மை இடம் இருந்து வெகு தூரம் அழைத்துச் சென்று விட்டது. சுலபமாக கற்பனை வலைக்குள் நாம் நம்மை சிக்க வைத்துக் கொள்கிறோம். ஆனால் அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட நெடிய போராட்டமும், முயற்சியும் தேவைப்படுகிறது. விடாமுயற்சியோடு இருந்துதான் இந்த கற்பனையில் இருந்து நம்மை நாம் மீட்டெடுக்க முடியும். விடாமுயற்சி எனும் பண்பு ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற பேருதவியாக அமைகிறது. வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment