வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 18
🔥🌸🔥🌸🔥🌸🔥🌸🔥🌸🔥
🚥 இன்றைய நித்தியக்கடன்
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 இன்றைய சாதகம்
🚥 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🚥 இன்றைய நற்சிந்தனை
🚥 மனவளக்கலை பயிற்சியில் நம்மை சரியாக இணைத்து கொண்டோமேயானால் நமக்கு சில பல உண்மைகள் தெள்ளத் தெளிவாக புரியும். அவை என்னவென்றால் உடல் சார்ந்த உண்மைகள், மனம் சார்ந்த உண்மைகள், உயிர் சார்ந்த உண்மைகள், அறிவு சார்ந்த உண்மைகள், பேரியக்க மண்டலம் சார்ந்த உண்மைகள், இயற்கை எனும் இறைவன் இயங்கும் உண்மைகள் என்று பல உண்மைகள் நமக்கு தெள்ளத்தெளிவாக புரியும். இதற்கு நாம் முறையாக இப் பயிற்சியில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்.
🚥 இன்றைய தற்சோதனை
🚥 இவை எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகுப்பு தான் நம்முடைய வாழ்க்கையாகும். இந்த மனித வாழ்க்கையை நாம் தெளிவாக உணர்ந்தும் புரிந்தும் கொண்டு வாழும்போது, எந்தவிதமான சிக்கலும் குழப்பமும் இல்லாமல் அவ்வப்போது ஏற்படக்கூடிய, வாழ்க்கை சூழ்நிலைகளை சரியான முறையில் கையாள தெரிந்துகொள்வோம். எங்கே? எப்படி? எவ்விதம்? நாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற தெளிவு ஏற்பட்டுவிடும்.
🚥 இன்றைய பண்புப்பயிற்சி
🚥 நம்முடைய மனித வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க ஒரு கணிதமாகும் (mathematics). பாவ புண்ணிய கணக்கு, நல்வினை பதிவுகள், தீவினை பதிவுகள், கோள்களின் சஞ்சாரம், எண்ணங்கள், அவ்வப்போது நம் உடலில் நடைபெறும் ரசாயன இயக்கங்கள் இவைகளை யெல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டு நடைபெறக்கூடிய கணித முறையே வாழ்க்கையாகும். இது கொஞ்சம் சிக்கலான கணிதம் தான், ஆனால் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் இந்த கணிதம் மிக மிக எளிதேயாகும். மனப்பக்குவத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டதே மனவளக்கலை. வாழ்க வளமுடன்...
🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment