நித்தியக்கடன் மார்ச் 15 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 15


🌌🔥🌌🔥🌌🔥🌌🔥🌌🔥🌌


🌸 இன்றைய நித்தியக்கடன்


🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌸 இன்றைய சாதகம்


🌸 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


🌸 இன்றைய நற்சிந்தனை


🌸 பொதுவாக எல்லோரும் மனித வாழ்க்கை மிகவும் சிக்கல் நிறைந்தது துன்பம் நிறைந்தது, என்ற எண்ணமும் சிந்தனையும் உலக மக்கள் அனைவரிடமும் காணப்படுகின்ற எண்ணமாக இருக்கிறது. இந்த மனிதப் பிறவி அவ்வளவாக துன்பமோ சிக்கல் நிறைந்ததோ அல்ல. மனிதன் வாழ வேண்டிய முறை என்று ஒன்று இருக்கிறது. அதை புரிந்துகொண்டு அதற்கு இசைவாக வாழும்போது மனித வாழ்க்கைதான் இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் மதிப்பும், சிறப்புமுடையது.


🌸 இன்றைய தற்சோதனை


🌸 உடல், மனம், உயிரைப் பற்றிய உண்மைகளை புரிந்து கொள்ளாமல் வாழ முயற்சிக்கும் போது, அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருப்பது இல்லை. உயிர், உடல், மனம், அறிவு இந்த மறை  பொருள்களைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு, தன்னைத்தானே ஆய்வுக்கு உட்படுத்தி கொண்டு, தற்சோதனையில் சிறந்து விளங்கும் போதுதான், மனித வாழ்க்கையின் சிறப்பு என்ன என்று நமக்குப் புரியும்.


🌸 இன்றைய பண்புப்பயிற்சி


🌸 மறைபொருளாக உள்ள எல்லா நிலைகளையும் உணர்ந்து கொண்டு, அதற்குத் தகுந்தவாறு நம்மை சீர்திருத்திக் கொள்வதற்காகவே, இந்த பூமிக்கு இந்த உருவத்தில் வந்திருக்கிறோம். ஆக மறைபொருள் விளக்கம் இல்லாமல் வாழும் போது, அது துன்பமும், சிக்கலும் நிறைந்ததாக தான் தோன்றும். மறைபொருள் உண்மைகளை உணர்ந்து கொண்டு, வாழக்கூடிய பண்பில் அனைவரும் உயர வேண்டும். வாழ்க வளமுடன்...


🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments