நித்தியக்கடன் மார்ச் 12 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 12


🌀☣️🌀☣️🌀☣️🌀☣️🌀☣️🌀


🔮 இன்றைய நித்தியக்கடன்


🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔮 இன்றைய சாதகம்


🔮 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


🔮 இன்றைய நற்சிந்தனை


🔮 பஞ்ச பூதங்களும், பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட நிலைப்பாடுகளும், ஐந்தறிவு சிவன் வரையில் எல்லாமே சுயநலம் இல்லாமல் பொதுநலத்தோடே இருக்கிறது. ஆனால் மனிதர்கள் மட்டும் பொதுநலம் கலந்த சுயநல குவியலாக வாழ முயற்சி செய்கிறார்கள், வாழ்கிறார்கள். இதன் விளைவாக உடலில் நோயையும், வாழ்க்கையில் சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சுயநலம் இல்லாத தன்மையே மனிதன் வாழ வேண்டிய தன்மையாகும்.


🔮 இன்றைய தற்சோதனை


🔮 அளவுக்கு மீறிய தேவைகள் மனிதர்களை சுயநலத்தோடு இருக்கும்படி கட்டாயத்தில் நிர்பந்தத்தில் தள்ளப் படுகிறார்கள். இது மனிதர்களுக்கு தெரியாமல் அவர்கள் அறியாமையில் வாழும் நிலையாகும். இந்த நிலையிலிருந்து மனிதர்கள் தங்களை தாங்களே விடுவித்துக் கொள்ள வேண்டும். பொது நலத்தோடு வாழும் முயற்சிக்கு  தற்சோதனையை சிறந்த கேடயமாக பயன்படும்.


🔮 இன்றைய பண்புப்பயிற்சி


🔮 பல ஜென்மங்களாக இந்த அறியாமையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், மனிதன் எப்படி வாழவேண்டும் என்று தெரியாத மனோநிலை மிகவும் கொடுமையானது. இந்த போக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும். உரிய பயிற்சி, அதற்குத் தகுந்த முயற்சி இவை உங்களை உயர்த்தும். நெடுங்காலமாக இருக்கும் இந்த கேட்டினை முறையாக இவைகளை அகற்றிக் கொள்ள முடியும். எல்லா நாளும் பயிற்சி செய்யும் பணியில் உயர்வோம். நம் வாழ்வை நாம் வாழ்வோம் வாழ்க வளமுடன்..!


🔮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments