வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 09
☘️🎲☘️🎲☘️🎲☘️🎲☘️🎲☘️
🔥 இன்றைய நித்தியக்கடன்
🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔥 இன்றைய சாதகம்
🔥 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🔥 இன்றைய நற்சிந்தனை
🔥 நீர் ஓரிடத்தில் சுழலும், ஓடும், தேங்கிநிற்கும், மண்ணுக்குள் ஊடுருவி செல்லும், மேற்பரப்பில் சூரிய ஒளியால் நீராவியாக மாறும். நீருக்கு என்று தனியாக ஒரு வடிவம் கிடையாது. எந்த பாத்திரத்திலும் அது பொருந்தும். இப்படி பல்வேறு பண்புகளை கொண்டு நீர் இயங்குகிறது. இவை எதை அடிப்படையாக கொண்டு இவ்வாறு செயல்படுகிறது என்றால், அந்தந்த சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு, தன்னை அதற்கு தகுந்தவாறு தகவமைத்துக் கொள்கிறது. இதுதான் நீரின் சிறப்பும் கோட்பாடு.
🔥 இன்றைய தற்சோதனை
🔥 இவ்வாறாக நாமும் நம் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலதரப்பட்ட சூழ்நிலைகளிலும், நம்மை அதற்கு தக்கவாறு தகவமைத்துக் கொண்டு தன்னார்வத்தோடு, இந்த மனித வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், முறை தவறாமல் நேர்மையாகவும் வாழ்தல் வேண்டும். துவக்கத்தில் எந்த ஒன்றும் சிரமமாகத்தான் இருக்கும். பழக பழக அதுவே நம் வாழ்க்கையாக மாறிவிடும். தற்சோதனை செய்து விளக்கத்தோடு எப்போதும் வாழவேண்டும்.
🔥 இன்றைய பண்புப்பயிற்சி
🔥 எல்லாவற்றையும் தற்சோதனை செய்யும் பண்பு நமக்கு மிகவும் அவசியம். தற்சோதனை தான், தன்னை தானே அடையாளம் காணும் பயிற்சி முறையாகும். தன்னை அடையாளம் கண்டு கொண்ட மனதிற்கும், அறிவுக்கும் தான். அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற விழிப்பு நிலை உருவாகும். மயக்க நிலையை தவிர்த்து விழிப்பு நிலையில் வாழ்வதற்கு தற்சோதனையோடு வாழும் பண்பு ஒன்று மட்டும்தான் ஞானத்தில் நம்மை உயர்த்தும். வாழ்க வளமுடன்...
🔥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment