வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 07
⛳🕳️⛳🕳️⛳🕳️⛳🕳️⛳🕳️⛳
🌌 இன்றைய நித்தியக்கடன்
🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌌 இன்றைய சாதகம்
🌌 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌌 இன்றைய நற்சிந்தனை
🌌 நமக்கு கிடைக்கின்ற அடிப்படை தகவல்களிலிருந்து நாம் செயல்கள் மூலமாக, அனுபவமாக்கிக் கொள்ளும் போது. கேள்விப்பட்டதற்கும் கிடைத்த அனுபவத்திற்கும் வேறுபாடுகள் இருக்கலாம். இதுபோன்றுதான் உயிரைப் பற்றிய தகவல்களும். அது அனுபவம் ஆகும் போது பல்வேறு விதமாக இருக்கும். பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றோடும். நாம் இணையவேண்டும். நம்மோடும் அவைகள் இணையவேண்டும். இவ்வாறு பழகும் போதுதான் முதல் தத்துவம் ஆகிய (விண்) உயிர் துகள்கள் முதாலான மாற்ற
நிலைகளும் அனுபவமாகும்.
🌌 இன்றைய தற்சோதனை
🌌 தற்சோதனை வழியாக நம்மை எந்த அளவுக்கு மென்மைப்படுத்தி கொள்கிறோமோ. அந்த அளவுக்கு நமக்கு உயிரின் ரகசியமெல்லாம் தெளிவாக நம் மனதிற்கு தட்டுப்படும். போகிற போக்கில் தற்சோதனை செய்யாதீர்கள் அதற்கென உள்ள முறையில் சரியாக பயன்படுத்தி இதில் முழுமையாக நாம் வெற்றி பெற வேண்டும் தற்சோதனை மட்டுமே உயிரையும் மனதையும் உடலையும் இயற்கையையும் உணர்வதற்கு சிறந்த வழிமுறையாகும்.
🌌 இன்றைய பண்புப்பயிற்சி
🌌 கொஞ்சம், கொஞ்சமாக நம்மை தூய்மையும், மென்மையும் படுத்திக்கொள்ள வேண்டும். உடனடியான மாற்றம் என்பது இந்த பிரபஞ்சத்தில் கிடையாது. ஆன்மீகத்திலும் கிடைக்காது. காலத்திற்கும், கருமைத் தன்மைக்கும் அவரவர்கள் எடுக்கும் முயற்சிக்கும் தக்கவாறு எல்லாமும் சிறுகச்சிறுக மாறும். இந்த ஆழமான உண்மையை தெளிவாக புரிந்து கொண்டு பொறுமையோடு சிந்தித்து செயலாற்றும் பணியில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🌌 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌌 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment